Hero Image

பப்புவாகினியாவில் 5.1 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!


 அமெரிக்காவில் நியூயார்க் பப்புவா நியூ கினியாவில் அமைந்துள்ள பங்குனாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பங்குனாவின் மேற்கு- வட மேற்கு திசையில் 153 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது . 5.1 ரிக்டராக பதிவாகி இருப்பதாக  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

170 கி.மீ. ஆழத்தில் உருவான இந்த  நிலநடுக்கம், 5.64 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 154.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.  நிலநடுக்கத்திற்கான தாக்கம் அதிகம் ஏற்படக் கூடிய பகுதியில் தான் பப்புவா நியூ கினியா உள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதியில் நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் அது அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

READ ON APP