Hero Image

ஆதார் அட்டையை தொலைத்து விட்டாலோ அல்லது மறந்து விட்டாலோ என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?


ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை கட்டாயம் குறிப்பிட்ட இடைவெளியில் புதுப்பிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் ஆதார் அட்டை தொலைத்து விட்டாலோ அல்லது ஆதார் எண்ணை மறந்து விட்டாலோ பயனர்கள் மிகவும் சிரமமான நிலையை சந்திக்க நேரிடும். இது போன்ற நிலைகளில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் கீழே கொடுக்கபட்டுள்ளது.

  • https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • ஆதார் எண்ணை மீட்டெடுப்பது என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
  • ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை உள்ளிட்ட வேண்டும்.
  • இதன்பின்னர் உங்களின் ஆதார் எண் விவரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.

ஆதார் அட்டை தொலைந்து விட்டால் அதனை டவுன்லோட் செய்வது எப்படி?

ஒருவேளை நீங்கள் உங்களுடைய ஆதார் அட்டையை தொலைத்து விடும் பட்சத்தில் UIDAI அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலமாக ஆன்லைனில் டூப்ளிகேட் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அதனை எப்படி செய்வது என்பதை படிப்படியான விளக்கத்துடன் இப்பொழுது பார்ப்போம்:

உங்களுடைய இ-ஆதாரை டவுன்லோட் செய்யவும்:

இது உங்களுக்கு இருக்கக்கூடிய இலவச மற்றும் விரைவான ஒரு ஆப்ஷன். ஆதார் அட்டையில் உள்ள அதே வேலிடிட்டியை இந்த டிஜிட்டல் நகலும் பெற்றுள்ளது.

உங்களது மொபைல் நம்பர் ஆதார் அட்டையுடன் பதிவு செய்யப்பட்டிருந்தால் இதனை நீங்கள் UIDAI அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் (https://myaadhaar.uidai.gov.in/portal). இதற்கு நீங்கள் உங்களுடைய ஆதார் நம்பர் அல்லது என்ரோல்மென்ட் ஐடி-யை என்டர் செய்ய வேண்டும். உங்கள் மொபைல் நம்பருக்கு அனுப்பப்பட்ட OTP-யை வெரிஃபை செய்த பிறகு PDF ஐ டவுன்லோடு செய்யலாம். இதனை பிரிண்ட் அவுட் எடுத்து லேமினேட் செய்து வைத்துக் கொள்ளவும்.

READ ON APP