Hero Image

தங்கம் விலையில் திடீர் சரிவு..! சவரனுக்கு 800 ரூபாய் குறைவு..!


அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக விற்பனையான நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 100 ரூபாய் குறைந்து, ரூ.6,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ரூ.52,920-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,501-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 82 ரூபாய் குறைந்து, ரூ.5,419-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 87,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமுமின்றி, ரூ.87,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.87.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

READ ON APP