Hero Image

ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தில் புதிய உச்சம்..!


ஜிஎஸ்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் மட்டும் ரூ.2.10 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இது கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தைவிட 12.4 சதவிகிதம் அதிகமாகும். அத்தியாவசியப் பொருட்களுக்கும், சிறு குறு தொழில்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதன் மூலம் மக்கள்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் கோடியாக வசூல் ஆகியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.43,846 கோடியும், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி ரூ.53,538 கோடியும், மத்திய-மாநில ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.99,623 கோடியும், செஸ் வரி ரூ.13,260 கோடியும் வசூல் ஆகியுள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.


 

READ ON APP