Hero Image

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! இனி வீட்டு கேஸ் சிலிண்டர் வெறும் 580 ரூபாய்க்கு கிடைக்கும்..!


பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், பல்வேறு அதிரடிகளை அறிவிப்புகளை, நுகர்வோர்களின் வசதிக்காக அறிவித்து வருகிறது.

அதாவது, இண்டேன் நிறுவனம் புதியவகை கேஸ் சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியது... எனினும், சில மாதங்களுக்கு முன்புதான், மக்களிடம் இந்த சிலிண்டர் பிரபலமாக துவங்கியது.. இந்த சிலிண்டர்களுக்கு காம்போசிட் சிலிண்டர் (Indane Composite Cylinder) என பெயரிடப்பட்டுள்ளது.

இவைகளை ஸ்மார்ட்டான சிலிண்டர்கள் என்கிறார்கள்

இந்த சிலிண்டர் எடை மிகவும் குறைவானது... துருப்பிடிக்காது.. இதனால் தரையில் கறை எதுவும் ஏற்படுத்தாது.. முற்றிலும் பாதுகாப்பானது. தவிர இந்த சிலிண்டர் மாடர்ன் கிச்சன்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. காம்போசிட் சிலிண்டர்கள் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையில் பயன்பாட்டிற்கு கிடைகின்றன.இவ்வகை சிலிண்டர்கள் வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியுள்ளது.

இந்த 10 கிலோ கலப்பு எரிவாயு சிலிண்டர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த காம்போசிட் சிலிண்டர் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎத்திலினால் செய்யப்பட்ட உள் உறையை கொண்டுள்ளது. 

மேலும் பாலிமரால் மூடப்பட்ட ஃபைபர் கிளாஸின் கலவை அடுக்கு மூலம் பாதுகாக்கப்படுகிறது. இது இரட்டை அடர்த்தி பாலிஎத்திலீனால் செய்யப்பட்ட வெளிப்புற ஜாக்கெட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சிலிண்டர்களில் ஃபிளாஷ்லைட் அல்லது மொபைல் ஃபோன்களில் உள்ள டார்ச்-ஐ பயன்படுத்தி எவ்வளவு எரிவாய் இருக்கும் என்பதையும் பார்க்க முடியும்.

10 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கான முக்கியமான காரணம், அதிக எடை கொண்ட சிலிண்டர்களைத் தூக்குவதிலும், மாற்றுவதில் சிரமங்களை எதிர் கொள்பவர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் வயதான நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஒரு வழக்கமான ஸ்டீல் சிலிண்டர் 30 கிலோ எடையும், 10 கிலோ கலப்பு எரிவாயு சிலிண்டர் தோராயமாக 16 கிலோ எடையும் இருக்கும்.

ஏற்கனவே இண்டேன் சமையல் எரிவாய் இணைப்பை பெற்றுள்ளவர்கள் பழைய ஸ்டீல் சிலிண்டர்களை திருப்பு ஒப்படைத்துவிட்டுக் கூடுதல் கட்டணம் செலுத்தி காம்போசிட் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம்.

10 கிலோ எடையில் பார்ப்பதற்கே மிக அழகாக, எடுத்துச் செல்ல எளிதான, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த, வெறும் 580 ரூபாய்க்கு கிடைக்கும்.

READ ON APP