Hero Image

இது தெரியுமா ? இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை யூஸ் செய்யலாம்...!


அவசரமாக வெளியே செல்லும் போது பர்ஸை மறந்து வைத்து செல்லும் பழக்கம் நம்மிடம் பலருக்கு உள்ளது.  

அவசரமான பணம் கட்ட வேண்டும் ஆனால் பேங்க் அக்கவுண்டில் பணம் இல்லை. சரி கிரெடிட் கார்டில் கட்டலாம் என்றால் கார்டு வீட்டிலேயே மறந்து வைத்து விட்டீர்கள். இப்ப என்ன செய்யுறது புரியலையா ?

நீங்கள் உங்கள் ஜிபே செயலி வைத்தே பணம் அனுப்ப முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? அதுவும் உங்கள் கிரெடிட் கார்டு மூலம்... இப்போது உங்கள் ரூபே கார்ட்டை உங்கள் யுபிஐ கணக்குடன் இணைக்க முடியும்.

இதன் மூலம் பார்ஸை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டாலும் கூட மொபைல் இருந்தால் போதும் உங்கள் கார்ட் மூலம் பணத்தைச் செலுத்தலாம். 

ஒரு கண்டிஷன்: நீங்கள் வழக்கம் போல க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பே செய்தால் போதும். கார்டில் இருந்து பணம் செலுத்த முடியும். சரி, இந்த கிரெடிட் கார்டை எப்படி யுபிஐ உடன் இணைக்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம். ஆனால், இதில் இருக்கும் ஒரு கண்டிஷன் ரூபே கிரெடிட் கார்டுகளை மட்டுமே உங்களால் பயன்படுத்த முடியும். மற்ற கார்டுகளை பயன்படுத்த முடியாது.

கூகுள் பே-ல்  ரூபே கிரெடிட் கார்டு இணைப்பது எப்படி? 

1. முதலில் கூகுள் பே ஆப் ஓபன் செய்யவும். 

2.  வலப்புறத்தில் உள்ள  profile icon பக்கத்திற்கு செல்லவும். 

3.  அதில் கீழே Scroll செய்து  ‘Payment’ methods செலக்ட் செய்யவும். அதில், ‘RuPay credit card’ என்ற ஆப்ஷனை கொடுக்கவும். 

4.  இப்போது ரூபே கிரெடிட் கார்டு இணைக்கப்பட்ட வங்கியை தேர்வு செய்யவும். 

5.  அடுத்து வரும் விவரங்களை கொடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு மெசேஜ் அனுப்பபடும். 

6. இது  verify செய்யப்பட்ட உடன்,  உங்கள் கிரெடிட் கார்டு கூகுள் பே-ல் இணைக்கப்படும். அதன் பின் கூகுள் பே-ல்  கிரெடிட் கார்டு மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம். 

READ ON APP