Hero Image

இந்த மாதம் 14 நாட்கள் விடுமுறை.. வாடிக்கையாளர்களே வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!


பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. மே மாதத்தில் சுமார் 14 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாத வங்கி விடுமுறை பட்டியல்:

மே 1, 2024 - புதன்கிழமை - உழைப்பாளர் தினம்/மகாராஷ்டிரா தினம்
மே 5, 2024 - ஞாயிற்றுக்கிழமை
மே 7, 2024 - செவ்வாய்க்கிழமை - 3-ம் கட்ட மக்களவை தேர்தல் (பீகார், சத்திஸ்கர், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், டாமன் & டயு, ஜம்மூ, குஜராத், அசாம்)

மே 8, 2024 - புதன்கிழமை - இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (மேற்கு வங்கம்)
மே 10, 2024 - வெள்ளிக்கிழமை - அட்சய திருதியை/வாசவ ஜெயந்தி (கர்நாடகா)
மே 11, 2024 - சனிக்கிழமை - 2வது சனிக்கிழமை
மே 12, 2024 - ஞாயிற்றுக்கிழமை


மே 13, 2024 - திங்கட்கிழமை - நான்காம் கட்ட மக்களவை தேர்தல் (ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜம்மூ)
மே 16, 2024 - வியாழக்கிழமை - மாநில தினம் (சிக்கிம்)
மே 19, 2024 - ஞாயிற்றுக்கிழமை

மே 20, 2024 - திங்கட்கிழமை - 5ம் கட்ட மக்களவை தேர்தல் (பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜம்மூ, லடாக்)
மே 23, 2024 - வியாழக்கிழமை - புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு, கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா, ராய்ப்பூர்)
மே 25, 2024 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை
மே 26, 2024 - ஞாயிற்றுக்கிழமை

READ ON APP