Hero Image

எந்த உபகரணமும் இன்றி எடையைக் குறைக்க இதை செய்து பாருங்க..!


 உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரம் சூரிய நமஸ்காரம்.இதை விதி முறைகள் படி செய்யும் போது உடல் பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.

மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்று இருகிறது. ஜிம்னாஸ்டிக், சன்பாத், என்ற பெயர்களில் சூரிய நமஸ்காரத்தை உட்படுத்திய பயிற்ச்சிகள் செய்து வருகின்றனர்.


சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலில் உள்ள எல்லா மூட்டுக்களும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் விட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய கதிர்களுக்கு உண்டு. கல்சியம் உற்பத்தியை கட்டு படுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உறுப்புகளும் உறுதி பெறுவதால் காச நோய் அணுக்களின் ஆக்கிரமிப்புகளும் தடுக்கின்றன.

தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதனால் அகால வயது முதிர்ச்சியையும் ஓரளவுக்கு தடுக்கலாம். மூட்டுக்கள் நல்ல லாபகம் அடைகின்றன. தொப்பை வயிறு வருவதை தடுக்க இயலுகிறது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவுகிறது.

சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம். பரிசுத்தமான எளிய வாழ்கை வாழ வேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும். குளிப்பது குளிர் நீர் ஆனால் நன்றாயிருக்கும். விசாலமானதும் காற்றோட்டம் உள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணிய வேண்டும்.

தேநீர், காபி, கொக்கோ, புகை இலை, மது பானம், முதலியவை அருந்த வேண்டாம். இப்டி அநேக விஷயங்களை கவனித்து சூரிய நமஸ்காரம் செய்ய தொடங்க வேண்டும்.  

சூர்யோதய நேரத்தில், கையைக் காலை முன்னும் பின்னும் வளைத்து, சூரியநமஸ்காரம் செய்தால் உடலின் அனைத்து அவயங்களும் புத்துணர்வு பெறும். மாலையில் சூரியன் மறையும் நேரத்திலும் இதைச் செய்யலாம்.கண்களை மூடி, கைகளில் சின்முத்திரை வைத்து (கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் ஒன்றை ஒன்று தொட்டபடி மற்ற விரல்கள் நீண்டிருக்கும் நிலை) 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். இது யோகா செய்வதற்கு முன் மனதை ஓய்வுபெறச் செய்யும்.


எப்போது செய்யவேண்டும் :

அதிகாலையில் அல்லது இளங்காலையில் எழுந்து செய்யவேண்டும். சூரியன் உதிக்கும்போது (5.30 மணி முதல் 6.30 மணிக்குள்) செய்வது மிகவும் நல்லது. சூர்யோதய நேரத்தில், கையைக் காலை முன்னும் பின்னும் வளைத்து, சூரியநமஸ்காரம் செய்தால் உடலின் அனைத்து அவயங்களும் புத்துணர்வு பெறும். மாலையில் சூரியன் மறையும் நேரத்திலும் இதைச் செய்யலாம்.

. வலது காலை முன்புறம் வைத்து, பின்புறம் வைப்பது, பிறகு இடது காலை அதே போல் செய்வது - இதை ஒரு முறை என்று வைத்துக்கொண்டால், இதே போல் 6 முறை செய்யலாம்.

அனைத்து ஆசனங்களின் பலன்களையும் ஒருங்கே தரக்கூடியது. மற்ற ஆசனங்களைச் செய்ய நேரம் இல்லை என்றாலும் கூட, இது ஒன்றைச் செய்தாலே போதுமானது.

எந்த உபகரணமும் இன்றி, எடையைக் குறைக்க மிகவும் உதவும் பயிற்சி.

மிகவும் வயது முதிர்ந்தவர்களும், தள்ளாட்டம் உள்ள பெரியவர்களும் செய்யக் கூடாது. மிகவும் களைப்பாக இருக்கும்போது செய்யாதீர்கள். காய்ச்சல், வயிற்றுப்போக்கு உடல் வலி இருந்தாலும் தவிர்க்க வேண்டும். அந்தச் சமயத்தில் சவாசனம் அல்லது சாந்தி ஆசனத்தில் படுத்து எழவேண்டும்.


 

READ ON APP