Hero Image

இது தெரியுமா ? தினமும் ஒரு முட்டை ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா ?


முட்டை ஒரு முழுமையான சத்து நிறைந்த உணவு.முட்டையில் அதிக அளவு புரோட்டின், வைட்டமின், மினரல், மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவைகளைக் கொண்டுள்ளது.தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு ஒரு முட்டை கொடுப்பது மிகவும் நல்லது. உடல் நலத்திற்கு தேவையான எதிர்ப்பு சக்தி கொடுத்து, ஊட்டம் அளிக்கிறது

முழு முட்டையில் உள்ள சத்துக்கள் :

முழு முட்டையில், வைட்டமின் ஏ, பி12, பி2, பி5, ஆகிய வைட்டமின்களும், செலினியம், ஜிங்க், பொட்டாசியம், ஃபோலேட் என்கின்ற மினரல்களும், உள்ளன. இதன் கலோரி அளவு-77, கொழுப்பு-5கிராம், புரோட்டின்-6 கிராம் ஆகிய சத்துக்களை ஒரு முழு முட்டை உள்ளடக்கியது.

முட்டையில் உள்ள கொழுப்பு சத்து :
முட்டையில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது தான். சந்தேகமேயில்லை. ஆனால் உடலிலுள்ள HDL என்கின்ற நல்ல கொழுப்புதான் அதிகமாகிறது.

இது இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்பான LDL-யை, இதயத்திலிருந்து வெளியேற்றி, கல்லீரலுக்கு அனுப்புகிறது. அங்கே கெட்ட கொழுப்பு முழுவதும் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகிறது.

இதனால் உடலில் கொழுப்பின் அளவு குறைகிறது. ஆகவே இங்கு சொல்ல வருவது என்னவென்றால், முட்டை சாப்பிடுவதனால் இதய நோய்கள் தடுக்கப்படும்.

கொலைன் அளவு முட்டையில் அதிகம்:
கோலைன் என்கின்ற பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் தேவை. அது மட்டுமில்லாமல் உடலின் பல இயக்கங்களுக்கும் கோலைன் தேவைப்படுகிறது. கோலைன் முட்டையில் அதிகமாக உள்ளது.

முட்டையில் இருக்கும் எஸன்ஷியல் அமினோ ஆசிட்ஸ் :
நம் உடலில் எல்லா செயல்களுக்கும் மொத்தம் 21 அமினோ அமிலங்கள் தேவை. அவற்றில் 12 அமினோ அமிலங்கள் நம் உடலிலேயே உருவாகக் கூடியவை.

மீதம் இருக்கிற 9 அமினோ அமிலங்கள் நம் உணவிலிருந்து தான் எடுத்துக் கொளள வேண்டும். அந்த தேவைப்படும் அமினோ அமிலங்களைத் தான் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் என்று கூறுவோம்.

முட்டையில் எல்லா தேவைப்படும் அமினோ அமிலங்களும் உள்ளது.

கண் புரையை தடுக்க ஒரு முட்டை தினமும் உணவில் போதும்:லியூடின் மற்றும் ஜீ ஜான்தின் என்கின்ற இரு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும், கண்களில் தாக்கும் கண் புரை மற்றும் பிற கண் நோய்களும் வராமல் காக்கின்றன. இவ்விரு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் முட்டையில் உள்ளது.

முட்டை சாப்பிட்டால் ஸ்லிமாகலாம்:
முட்டையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்ற கொழுப்பு அமிலம் உல்லது அது HDL அளவை அதிகப்படுத்திகிறது. கொழுப்பு குறைந்து உடலை ஸ்லிம்மாக வைக்க உதவுகிறது.முட்டை நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் பெற்றுள்ளது. தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் போதும். வளமோடு வாழலாம்.

பச்சை முட்டையை விட, வேக வைத்த முட்டையில் இரு மடங்கு சத்து அதிகமாகிறது. ஆகவே வேக வைத்த முட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்
அதுமட்டுமில்லாமல் போதிய சத்து இல்லாத நோஞ்சான் குழந்தைகளுக்கு ஒரு முட்டை தினமும் கொடுத்தால் உடலுக்கு தேவையான சத்தும் எதிர்ப்பு சத்தியும் கிடைக்கும்.

 

READ ON APP