Hero Image

இது தெரியுமா ? இதை தொடர்ந்து 48 நாட்கள் தொட்டு வந்தாலே மனோசக்தி அதிகரிக்கும்..!


1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி.காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

‘நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் ‘காமவர்த்தினி' என்றும் கூறுவர்.

ஒவ்வொரு கிளைக்கும் சுமார் 10-25 எதிர் அடுக்கு இலைகள் உள் நோக்கி இருக்கும். இலைகள் இடையில் ஊதா நிறப் பூக்கள் மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இருக்கும்.தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக  உள்ளது தொட்டா சிணுங்கி

தொட்டவுடன் தன்னை சுருக்கிக் கொள்ளக்கூடிய காந்த சக்தி தன்மை கொண்ட மூலிகை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து தொட்டு வந்தாலே மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுர்வேத மருத்துவத்திலும், யுனானி மருத்துவத்திலும் பயன்படுகின்றது.

தோல் வியாதிகள், குழந்தை பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கும் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது.

உடல் குளிர்ச்சி அடையும். வயிற்றுப்புண் ஆறும் மூலம் நோய் நீங்கும்.

கல் அடைப்பு

தொட்டால் சுருங்கி இலை மற்றும் அதன் வேரினை பஞ்சு போல தட்டி, ஒரு மண் குடுவையில் போட்டு கால்படி தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி சுண்ட காய்ச்சவும்.

சுண்ட காய்ச்சிய பின்னர் வடிகட்டி ஒரு வேலைக்கு கால் அவுன்ஸ் வீதம் தினசரி குறைந்தது இரண்டு முதல் மூன்று வேலை கொடுக்கவும்.

அல்லது ஒரு பங்கு தொட்டால் சுருங்கி இலைக்கு பத்து மடங்கு கொதிக்கின்ற தண்ணீர்விட்டு ஆறின பின் வடிகட்டி வேலைக்கு ஒரு அவன்ஸ் வீதம் தினம் இரண்டு மூன்று வேலை கொடுக்கவும்.

இவற்றால் நீர் அடைப்பு, கல் அடைப்பு தீரும்.

ஆண்மை குறைபாடு

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் பதினைந்து கிராம் கலந்து சாப்பிட வேண்டும்.

தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.

சிறுநீர் எரிச்சல்

சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.

வயிற்றுக் கடுப்பு

இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சை அளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட்டு வர வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

மூலம்

தொட்டால் சுருங்கி இலை மற்றும் அதன் வேரினை நன்கு உலர்த்தி சூரணம் செய்து வைத்துக்கொள்ளவும் .அந்த சூரணத்துடன் பசும்பால் சேர்த்து கொடுப்பதன் மூலமாக மூல நோய் குணமடையும்.

தொட்டால் சுருங்கி இலைச் சாற்றை மூலம் உபாதைகளுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும்.புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணீல் விடுவதோடு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.

மேனியில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில் இவ்விலையைப் பறித்து வந்து , அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.

READ ON APP