Hero Image

மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


தமிழ்நாட்டில் கோடை தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக சேலத்தில் நேற்று முன்தினம் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது, தகிக்கும் வெயிலால் ஏராளமானோர் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோடை வெயிலுக்காக திமுகவினர் நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர், மோர் பந்தல்களை அமைப்பதுடன், கால்நடைகள் எளிதில் நீர் பருகுவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம். கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

READ ON APP