Hero Image

நீங்கள் எஸ்பிஐ வங்கி டெபிட் கார்டு பயன்படுத்துபவரா ? உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்..!


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா டெபிட் கார்டுதாரர்களுக்கு, சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வருடாந்திர பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்படுகிறது.அதாவது, ஏப்ரல் 1ஆம் தேதி முதில் குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை ரூ.75 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 

டெபிட் கார்டுகளின் வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்களில் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் .புதிய கட்டணங்கள் 01 ஏப்ரல் 2024 முதல் அமலுக்கு வரும் என வங்கி தெரிவித்துள்ளது. கிளாசிக் / சில்வர் / குளோபல் /  டெபிட் கார்டுகள்.

ரூ.125/ +ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 200/ + ஜிஎஸ்டி வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும்

  • யுவா/தங்கம்/காம்போ டெபிட் கார்டு/இமேஜ் கார்டு ரூ.175/ + ஜிஎஸ்டி என்பதில் இருந்து ரூ. 250/+ ஜிஎஸ்டி என வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் அதிகரிக்கும்
  • பிளாட்டினம் டெபிட் கார்டு கட்டணம் ரூ. 250/ +ஜிஎஸ்டி என்பதில் இருந்து ரூ. 325/+ ஜிஎஸ்டி ஆக அதிகரிக்கும்  
  • பிரைடு / பிரீமியம் வணிக டெபிட் கார்டு ரூ.350/ +GST என்பதில் இருந்து ரூ. 425/+ ஜிஎஸ்டி ஆக கட்டணம் அதிகரிக்கும்  
  • அதேபோல, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டில் கட்டணம் செலுத்தினால் ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படாது என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. 
  • ஏப்ரல் 1 முதல் எந்தெந்த எஸ்பிஐ கார்டுகள் ரிவார்டு புள்ளிகளைப் பெறாது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

    • எஸ்பிஐ கார்டு எலைட்,
    • எஸ்பிஐ கார்டு பிரைம் ,
    • எஸ்பிஐ கார்டு ப்ரைம் அட்வான்டேஜ்,
    • எஸ்பிஐ கார்டு பிளாட்டினம்,
    • எஸ்பிஐ கார்டு பிரைம் புரோ,
    • எஸ்பிஐ கார்டு எலைட் அட்வாண்டேஜ்,
    • எஸ்பிஐ கார்டு பல்ஸ்,
    • சிம்ப்லி கிளிக் எஸ்பிஐ கார்டு,
  • சிம்பிள் கிளிக் அட்வான்டேஜ்,
  • எஸ்பிஐ கார்டு ஷௌர்யா செலக்ட்,
  • எஸ்பிஐ கார்டு பிளாட்டினம் அட்வாண்டேஜ்,
  • டாக்டர் எஸ்பிஐ கார்டு.
  • ஏப்ரல் 15 முதல் எந்த கார்டுகளுக்கு ரிவார்டு புள்ளிகள் கிடைக்காது என்று இங்கே பார்க்கலாம்.

    • ஏர் இந்தியா எஸ்பிஐ பிளாட்டினம் கார்டு,
    • ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கார்டு,
    • ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டு பிரீமியர்,
    • லைஃப் ஸ்டைல் ஹோம் சென்டர் எஸ்பிஐ கார்டு.

    READ ON APP