Hero Image

Work from home: ஆபிஸிற்கு 60% வருகை இல்லாவிட்டால் பெர்ஃபாமன்ஸ் போனஸ் கிடையாது… TCS அதிரடி அறிவிப்பு…

இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான TCS, ஊழியர்கள் அலுவலகத்திற்குச் செல்வது, அதாவது அலுவலகத்தில் இருந்து வேலை செய்வது தொடர்பாக ஒரு பெரிய முடிவை எடுத்து வருகிறது. இப்போது TCS நிறுவனத்தின் ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு பதிலாக ஹைப்ரிட் மாதிரியை செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகிறது.

தற்போது அலுவலகத்தில் இருந்து வேலை செய்யாத ஊழியர்களுக்கு பெர்ஃபார்மென்ஸ் போனஸ் வழங்குவதில்லை என்ற பெரிய முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியிடப்பட்ட உள் குறிப்பில், 60% க்கும் குறைவான வருகையைப் கொண்டுள்ள ஊழியர்களுக்கு இந்த நன்மை கிடைக்காது என்று கூறுகிறது. நிபந்தனைகளின்படி, ஊழியர்கள் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்வது கட்டாயமாகும்.

சில அறிக்கையின்படி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 60 சதவீத வருகைப் பதிவேடு தொடர்பான கண்டிப்பை அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஊழியர்கள் தேவைக்கேற்ப வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும். தங்கள் வேலையை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க TCS முடிவு செய்துள்ளது.

கொரோனாவுக்குப் பிறகு, நிறுவனம் பெரிய அளவில் வீட்டிலிருந்து வேலை செய்யத் அறிவுறுத்தியது. ஆனால், கொரோனாவுக்கு பிறகு இந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது. ஆனால் பல ஊழியர்கள் பணிக்கு திரும்பவில்லை. எனவே, தற்போது வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதுடன், அலுவலகத்தில் இருந்து செய்யும் பணியை ஊதியம் அல்லது வருடாந்திர போனஸுடன் இணைத்துள்ளது.

85 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் வருகைப் பதிவை பராமரிக்காத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் நிறுவனத்தின் மெமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் வருகை விதிகளை பின்பற்றவில்லை என்றால், அதற்கான காரணத்தை அவர் தெளிவாக விளக்க வேண்டும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. இது தவிர, அத்தகைய பணியாளர்கள் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் பெற வேண்டும். இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து நிறுவனம் எந்த குறிப்பிட்ட அறிக்கையையும் தற்போது வெளியிடவில்லை.

TCS புதிய வருகை விதியை அறிவித்துள்ளது. அதில் ஒவ்வொரு வாரமும் ஊழியர்கள் குறைந்தபட்சம் 45 மணி நேரம் அலுவலகத்திற்கு வந்து பணி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, வாரத்தில் 4 நாட்கள் அல்லது அதற்கு மேல் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களுக்கு 100 சதவீத செயல்திறன் போனஸ் கிடைக்கும். அதே நேரத்தில், 75 முதல் 85 சதவீதம் வருகைப் பதிவு உள்ள ஊழியர்களுக்கு 75 சதவீதம் செயல்திறன் போனஸ் வழங்கப்படும். இதனுடன், 60 முதல் 75 சதவீத ஊழியர்களுக்கு 50 சதவீத செயல்திறன் போனஸ் கிடைக்கும். 60 சதவித்தற்கு கீழ் வருகை பதிவை வைத்திருப்பவர்களுக்கு போனஸ் கிடைக்காது. இதனுடன், வாரந்தோறும் 9 மணி நேரம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற விதியும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

READ ON APP