Hero Image

வட்டியை உயர்த்திய தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி.. வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு!

தனியார் துறை வங்கியான தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (எம்சிஎல்ஆர்) உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. எம்சிஎல்ஆர் விகிதத்தை இவ்வங்கி 0.10-0.15 சதவீதம் அதிகரித்துள்ளது.ஃபோர்ட் நைட் எம்சிஎல்ஆர் விகிதம் 7.75 சதவீதத்தில் இருந்து 7.85 சதவீதமாகவும், ஒரு மாத எம்சிஎல்ஆர் விகிதம் 7.75 சதவீதத்தில் இருந்து 7.85 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தெரிவித்துள்ளது.இது தவிர, 3 மாத எம்சிஎல்ஆர் விகிதம் 8.50 சதவீதத்தில் இருந்து 8.60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேபோல, ஆறு மாத எம்சிஎல்ஆர் விகிதம் 8.85 சதவீதத்தில் இருந்து 8.95 சதவீதமாகவும், ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 9.60 சதவீதத்தில் இருந்து 9.75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. MCLR என்பது வங்கிகள் கடன் வழங்கும் குறைந்தபட்ச விகிதமாகும். அதாவது வங்கி வழங்கும் குறைந்தபட்ச கடன் விகிதம் இதுவாகும். கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டின் ஏப்ரல் 1ஆம் தேதியன்று MCLR விகிதத்தை அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்திருந்தது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மீது ரூ.1.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

READ ON APP