Hero Image

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் இனி அதிக வட்டி.. HDFC வங்கி அறிவிப்பு!

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தின் மீதான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இந்த புதிய உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, இவ்வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 7.75 சதவீதம் வட்டி கிடைக்கும்.ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.2 கோடிக்கு கீழ் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்கின்றனர்.
இந்த வங்கி அவர்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் அல்லது 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரையிலான டெபாசிட்களில் 7.25 சதவீத வட்டி விகிதத்தில் பொதுவான முதலீட்டாளர்களுக்கு வட்டி வருமானம் வழங்கப்படும். அதேநேரம் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
பொது முதலீட்டாளர்கள் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 7 சதவீத வட்டி பெறலாம். மூத்த குடிமக்களுக்கு அதே காலத்திற்கு 7.75 சதவீத வட்டி வருமானம் வழங்கப்படுகிறது.ஹெச்டிஎஃப்சி வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறையில் பல்வேறு வட்டி விகிதங்களில் டெபாசிட்களை வழங்குகிறது. அதேபோல, 18 மாதங்களில் இருந்து 21 மாதங்களுக்கும் குறைவான டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்துள்ளது.
அதாவது, வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

READ ON APP