Hero Image

ரயில்களில் மிடில் பெர்த் பிரச்சினை.. பயணிகளுக்கு இப்படி ஒரு வசதி.. நிறையப் பேருக்கு தெரியாது!!

ரயில் பயணிகளின் வசதிக்காக இந்த விதிமுறை இருக்கிறது. இது நிறையப் பேருக்கு தெரியாது. ரயில் பயணிகள் கவனத்துக்கு..!
ரயில் டிக்கெட் புக்கிங்!

நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு இது மிகவும் முக்கியமான செய்தி. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யும் வசதி உள்ளது.

அதாவது, மேல் பெர்த், கீழ் பெர்த், சைடு பெர்த் என நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் புக்கிங் செய்யும்போதெல்லாம் அதற்கான சீட் உங்களுக்கு கிடைக்காது.


விரும்பிய சீட் கிடைக்காது!

நிறையப் பேர் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போதே தங்களுக்கான சீட் இதுதான் என்று தேர்வு செய்வதாலும் பெர்த்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் நமக்கு ஏதோ ஒரு பெர்த் ஒதுக்கீடு செய்யப்படும். அதாவது, பெரும்பாலான மக்கள் கீழ் பெர்த் வேண்டும் என்று தேர்வு செய்வார்கள். ஆனால் கீழ் பெர்த் என்பது முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்றோருக்கே ஒதுக்கீடு செய்யப்படும்.


விதிமுறைகள் முக்கியம்!

பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளில் உள்ள பெர்த் தொடர்பாக சில விதிமுறைகளை இந்திய ரயில்வே வைத்துள்ளது. எனவே நீங்கள் ரயிலில் பயணம் செய்வதற்கு முன்அந்த விதிமுறைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் எந்த சிரமமும் இல்லாமல் பயணிக்க முடியும் என்பதோடு, உங்களுக்கான சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


மிடில் பெர்த் வேண்டாம்!

பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தின் போது தங்களுக்கு மிடில் பெர்த் கிடைத்துவிட்டால் கவலைப்படுவார்கள். ஏனெனில் கீழ் பெர்த் மற்றும் மேல் பெர்த்களை விட மிடில் பெர்த்தில் தூங்குவதும் மேலே ஏறுவதும் சற்று கடினமாக இருக்கும். அதேபோல, மிடில் பெர்த்தில் உட்கார முடியாது. அதேபோல, மிடில் பெர்த்தை இறக்கி விடுவதில் சக பயணிகளுடன் பிரச்சினை ஏற்படும். இதனால் பெரும்பாலான மக்கள் மிடில் பெர்த்தை விரும்புவதில்லை.


பயணிகளுடன் பிரச்சினை!

கீழ் பெர்த் கிடைத்த பயணிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் நீண்ட நேரம் அமர்ந்துகொண்டே வருவார்கள். சாப்பிடுவது நண்பர்கள் - உறவினர்களுடன் பேசிக் கொண்டு வருவது என இருப்பார்கள். நீண்ட நேரம் தூங்கவே மாட்டார்கள். ஆனால், அவர்கள் தூங்கினால்தான் மிடில் பெர்த்தை ஓப்பன் செய்து அதில் இருக்கும் பயணிகள் தூங்க முடியும். பெர்த்தை கீழே இறக்கிவிட முயற்சித்தாலும் கீழ் பெர்த்தில் இருப்பவர்கள் வாக்குவாதம் செய்வார்கள். இதுபோன்ற நிறைய பிரச்சினைகள் வரும்.


மிடில் பெர்த்தால் பிரச்சினை!

மிடில் பெர்த் ஒதுக்கப்பட்ட பயணிகள் அதுதொடர்பான விதிமுறை பற்றி தெரிந்திருந்தால் இதுபோன்ற பிரச்சினையே வராது. அவர்களுக்கும் சில உரிமைகள் உள்ளன. மிடில் பெர்த்தில் தூங்கும் பயணிகள் சில சமயங்களில் ரயில் கிளம்பியவுடன் அதைத் திறந்து விடுவார்கள். இதனால் கீழ் பெர்த்தில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். இதுவும் ஒரு பிரச்சினையாக மாறிவிடும்.


ஓப்பன் செய்யக் கூடாது!

உண்மையில், இந்திய ரயில்வே விதிகளின்படி, மிடில் பெர்த் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அந்த பெர்த்தில் தூங்க முடியும். அந்த நேரத்தை தாண்டி தூங்கினால் மற்ற பயணிகள் அவர்களை எழுப்பி விடலாம். ஏனெனில், அந்த நேரத்தை தாண்டி மிடில் பெர்த்தை ஓப்பன் செய்து வைக்கக் கூடாது.


தொந்தரவு செய்ய முடியாது!

காலை 6 மணிக்குப் பிறகு மற்ற பயணிகள் கீழ் பெர்த்தில் அமரக்கூடிய வகையில் மிடில் பெர்த்தை மடக்கிவிட வேண்டும். அதேபோல, இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் தூங்கிய பிறகு யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. சொல்லப்போனால் டிக்கெட் பரிசோதகர் கூட அந்த நேரத்தில் அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. ஆனால், இரவு 10 மணிக்கு மேல் பயணத்தைத் தொடங்கும் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் சோதனைக்காக வந்தால் இந்த விதிமுறை பொருந்தாது.

READ ON APP