Hero Image

மைக்ரோசாஃப்டையும் விட்டுவைக்காத பணிநீக்கங்கள்.. மொத்தமாக காலியான கேமிங் குழு!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் பெருமபாலான கேமிங் குழுக்களில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக அர்கேனி ஆஸ்டின் (Arkane Austin) குழுவும் இதில் அடங்கும் எனத் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நிறுவனம் அதன் முக்கிய கேமிங் துறையை மறுசீரமைப்பு செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.இதுகுறித்து மைக்ரோசாஃப்டின் எக்ஸ்பாக்ஸ் கேம் ஸ்டுடியோவின் தலைவரான மேட் பூட்டி (Matt Booty) டோக்கியோவைச் சேர்ந்த டேங்கோ கேமிங் பணியாளர்கள், கனடாவைச் சேர்ந்த ஆல்ஃபா டாக் (Canada-based Alpha Dog) குழுக்களும் பணிநீக்கங்களை சந்திக்கும் வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் எத்தனை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது குறித்த சரியான விவரங்கள் செய்தி நிறுவனங்களிடம் கூறப்படவில்லை.இந்த பணிநீக்கம் குறித்து மாட் பூட்டி கூறுகையில் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவை சரிசெய்யவும், அக்குழுவை பராமரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இந்த பணிநீக்க முடிவுகள் எடுக்க மற்றொரு காரணம் எனவும் கூறியுள்ளார்.டேக்-டூ இன்டராக்டிவ் கடந்த வாரம் ஒரு பரந்த மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இரண்டு துணை ஸ்டுடியோக்களை மூடுவதாக அறிவித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மைக்ரோசாப்ட் ஆக்டிவிஷன் மற்றும் எக்ஸ்பாக்ஸ் முழுவதும் 1,900 ஊழியர்களைப் பாதிக்கும் குறிப்பிடத்தக்க பணிநீக்கங்களைத் தொடங்கியது.

READ ON APP