Hero Image

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான வேலை.. உடனே அப்டேட் பண்ணுங்க!

வங்கி வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்துவதற்காக கேஒய்சி தொடர்பான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கிறது. எனவே வங்கி வாடிக்கையாளர்களும் இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கில் உள்ள கேஒய்சி ஆவணங்களைப் புதுப்பிக்க வங்கிக் கிளைக்கு நேரடியாகச் செல்லலாம். நேரடியாகச் செல்ல முடியாதவர்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இது தவிர, வேறு சில செயல்முறைகள் மூலமாகவும் நீங்கள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம். எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் மூலம் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் இந்த யோனோ ஆப் உள்ளவர்கள் எளிதாக கேஒய்சி சரிபார்ப்பை செய்ய முடியும்.
அந்த ஆப் இல்லாவிட்டாலும் பிளே ஸ்டோர் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.கேஒய்சி சரிபார்ப்பு செய்ய முதலில் நீங்கள் Yono செயலியில் உள்நுழைய வேண்டும். இதற்குப் பிறகு, முகப்புப் பக்கத்தின் மேல் இடதுபுறத்தில் உள்ள மெனுவில் சேவை கோரிக்கைக்குச் செல்லவும். அடுத்து ‘KYC Update’ ஐகானைக் கிளிக் செய்யவும். சுயவிவர கடவுச்சொல்லை உள்ளிட்டு ’Submit' பட்டனை கிளிக் செய்யவும். இப்போது நிரப்பப்பட்ட முகவரியைச் சரிபார்க்கவும். தேவையான தகவல்களை அப்டேட் செய்யவும்.
இதற்குப் பிறகு, தேவைப்பட்டால் கேஒய்சி விவரங்களைப் புதுப்பிக்கலாம். இப்போது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP நம்பர் அனுப்பப்படும். அதை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும். கேஒய்சி விவரங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உங்கள் கணக்கு தொடர்பான புதிய கேஒய்சி ஆவணத்தைப் புதுப்பிக்க, உங்கள் அசல் கேஒய்சி ஆவணம் மற்றும் புகைப்படத்துடன் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும்.

READ ON APP