Hero Image

யாருக்கு ஓட்டு என்பதை ஏன் ரகசியமாக வைக்க வேண்டும் தெரியுமா..? குலைநடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்

கடலூர்: தான் யாருக்கு வாக்களித்தேன் என்று பகிரங்கமாக தெரிவித்த பெண்ணுக்கு நேர்ந்த கதியை பார்த்து கடலூரே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. வாக்குரிமை ரகசியம் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதற்கும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது.
திமுக, அதிமுக, பாஜக என்று மும்முனைப் போட்டி நிலவியதால் பெரும் பரபரப்புக்கு இடையே தேர்தல் நடைபெற்றது. இதில் 74 சதவீதத்துக்கும் மேலாக வாக்குகள் பதிவாகின. இது ஒருபுறம் இருக்க, இதற்கு முன் நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் இல்லாத அளவுக்கு, இந்த முறை யாருக்கு வாக்களித்தோம் என்பதை பலரும் பகிரங்கமாக கூறி வருவதை பார்க்க முடிகிறது. ஆம்பளைங்களை விடுங்க.. பொம்பளைங்களே லெஸ்பியன் உறவுக்கு கூப்பிடுறாங்க.. பெண் டாக்சி டிரைவர் கண்ணீர்அதுமட்டுமல்லாமல், வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு தாங்கள் ஓட்டு போட்டோம் என்பதை செல்போன் கேமராவில் வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களிலும் சிலர் வைத்து வருகின்றனர். தேர்தல் நடைபெறும் போது இவ்வாறு செய்வது பிறரை மூளைச்சலவை செய்வது போன்றது ஆகும். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்று தெரியாமலேயே சிலர் பெருமையாக நினைத்துக் கொண்டு இதுபோல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்படி வாக்கு செலுத்துவதை பகிரங்கப்படுத்துவது கொலையில் முடிந்துள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த பக்ரிமாணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதி. இவர் நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிகாலையிலேயே சென்று வாக்களித்தார்.வாக்களித்தோமா வீட்டுக்கு வந்தோமோ என்று இல்லாமல், வாக்குச்சாவடி முதல் கடைத்தெரு வரை நான் இந்தக் கட்சிக்குதான் வாக்களித்தேன் என்று பகிரங்கமாக கூறியபடியே இருந்துள்ளார். கோமதி இவ்வாறு கூறியது அங்குள்ள மாற்றுக்கட்சி நபர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதே ஊரைச் சேர்ந்த அருள், ரவி ராஜா, அறிவுமணி, பாண்டியன், கலைமணி, தர்மராஜ் ஆகியோர் கோமதியின் வீட்டிற்கு சென்று, ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்காமல், அந்தக் கட்சிக்கு வாக்களித்தாய்? என்று கேட்டனர். "ஆ.. பிராமணர்களின் ஓட்டுகளையே காணோமே".. என்ன பண்ணீங்க.. ஸ்பாட்டுக்கே வந்த வானதி சீனிவாசன்இதனால் கோமதிக்கும், அவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றவே, 7 பேரும் சேர்ந்து அருகில் இருந்த கட்டை, இரும்பு கம்பியை கொண்டு கோமதியை கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ரத்தவெள்ளத்தில் நிலைக்குலைந்து சரிந்த கோமதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸார், அங்கு வந்து கோமதியின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த 3 பெண்களையும் போலீஸார் கைது செய்தனர்.

READ ON APP