Hero Image

சாக்லேட் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை.. திடீர் ரத்த வாந்தி.. என்னாச்சு

சண்டிகர்: பஞ்சாபில் சாக்லேட் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த தம்பதியர், தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை கூட்டிக்கொண்டு லூதியானாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அந்தக் குழந்தைக்கு உறவினர் வீட்டில் உள்ளவர்கள் சாக்லேட் வாங்கிக் கொடுத்துள்ளனர்.இதையடுத்து, வீடு திரும்பிய பின்னர், அந்த சாக்லேட்டை குழந்தைக்கு அதன் பெற்றோர் சாப்பிட கொடுத்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் அந்தக் குழந்தை திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அது சாப்பிட்ட ஏதோ ஒரு பொருள் விஷமாக மாறி இருப்பதாக தெரிவித்தனர்.பின்னர் குழந்தையின் பெற்றோர், இதுகுறித்து போலீஸாருக்கு புகார் அளித்தனர். இதன்பேரில் போலீஸாரும், சுகாதாரத்துறையினரும் லூதியானாவில் சாக்லேட் வாங்கப்பட்ட மளிகைக் கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த பல பொருட்கள் காலாவதி ஆகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மளிகை கடைக்கு சீல் வைத்த சுகாதாரத்துறையினர், இதுதொடர்பாக அந்தக் கடைக்காரரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அந்த குழந்தை ஆபத்தான நிலையில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறது.

READ ON APP