Hero Image

அவரை பத்தி நான் பேச விரும்பல: கங்கனா ரனாவத் பற்றி மாஜி காதலர்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், நடிகர் அத்யாயன் சுமனும் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை காதலித்தார்கள். அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு அது பெரிதாகி பிரிந்தார்கள். அந்த சமயத்தில் கங்கனா மீது புகார் தெரிவித்தார் அத்யாயன்.இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் அத்யாயன் சுமனிடம் கங்கனா ரனாவத் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு அத்யாயன் சுமன் கூறியதாவது, கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்நீங்கள் சொல்லும் நபர் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஏனென்றால் நான் கடந்த காலத்தை மறந்துவிட்டேன். அது நடந்த பிறகு நான் அதை கடந்து வந்துவிட்டேன். அப்பொழுது எனக்கு 20 வயது, தற்போது 36 வயது என்றார்.பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கங்கனா ரனாவத் பாஜகவில் சேர்ந்தார்.
இதையடுத்து நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.பாஜக தலைவர்களுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தான் பிறந்த மாநிலத்தில் போட்டியிடும் வாய்ப்பு கொடுத்த பாஜகவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கங்கனா. கெரியரை பொறுத்தவரை எமர்ஜென்சி படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்திருக்கிறார்.கடந்த 2009ம் ஆண்டு வெளியான ராஸ்- தி மிஸ்டரி கன்டினியூஸ்( Raaz: The Mystery Continues) படத்தில் கங்கனா ரனாவத்தும், அத்யாயன் சுமனும் சேர்ந்து நடித்தார்கள்.
அப்பொழுது தான் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. கங்கனாவை பிரிந்தபோது அத்யாயன் கூறியதாவது, நான் வீட்டை விட்டு ஓடினப்போ அம்மாவின் இதயம் நொறுங்கிடுச்சு: பிரபல நடிகை உருக்கம்கங்கனா ஒரு மோசமான காதலி. அவரை காதலித்த ஓராண்டு காலம் என் வாழ்க்கை நரகமாக இருந்தது. நரகமாக்கிவிட்டார் கங்கனா என்றார். கங்கனா ரனாவத்துக்கு திருமணமாகவில்லை. சிங்கிளாக உள்ளார். அவரின் கவனம் எல்லாம் சினிமா மீது தான் உள்ளது. தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
மாண்டி தொகுதியில் வெற்றி பெற்று அந்த மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார் கங்கனா.

READ ON APP