Hero Image

உங்க கல்லீரல் கழிவை வெளியேத்தி புதுசு மாதிரி மாத்தணுமா? உங்க டயட்ல இந்த 6 சேஞ்ச் மட்டும் செய்ங்க!...

உடலின் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தாலே ஒட்டுமொத்த உடலும் ஆரேக்கியமாக இருப்பதாக அர்த்தம். அதிலும் கல்லீரல் ஆரோக்கியமாக செயல்படுவது மிக முக்கியம். கல்லீரல் ஆரோக்கியத்தை பொருத்த வரையில் உணவுமுறை மிக மிக முக்கியம். அந்த கல்லீரல் ஆரோக்கியத்துக்கான உணவுமுறை பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
​ஆரோக்கியமான கொழுப்பு

கொழுப்பு என்று சொன்னாலே கெட்டது என்கிற மனநிலை நிறைய பேருக்கு இருக்கிறது. நல்ல கொழுப்பு உணவுகளுக்கும் கெட்ட கொழுப்பு உணவுகளுக்கு நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதிகப்படியான சிவப்பு இறைச்சி, ரீஃபைண்ட் ஆயில், உருக்கிய வெண்ணெய், வறுத்த உணவுகள், ப்ராசஸ்டு உணவுகள் ஆகியவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அதிக அளவு கொழுப்புகள் உள்ளன.அதேசமயம், நட்ஸ் வகைகள், பீநட் பட்டர், வெண்ணெய், சாய்கறிகள், மீன், விதைகள், வால்நட், ஆலிவ் ஆயில், சோளம், சோயா ஆகியவற்றில் நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருக்கின்றன.


​இலைவடிவ காய்கறிகள்

கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்க நார்ச்சத்துக்கள் மிக அவசியம். காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் அதிகம். அதிலும் குறிப்பாக, கீரைகள், முட்டைகோஸ் உள்ளிட்ட பச்சையிலை காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் மிக அதிகம்.

இவற்றை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது ஸ்மூத்தியாகவோ எடுத்துக் கொள்வதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றும்.
​சிட்ரஸ் பழங்கள்

கிரேப் ஃப்ரூட், ஆரஞ்சு பழம், எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கின்றன..

இவை உடலில் உள்ள கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றும். சிட்ரஸ் பழங்களை தினமும் ஃப்ரஷ் ஜூஸாக எடுத்துக் கொள்ளும்போது புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் நச்சுக்கள் மற்றும் கல்லீரல் நச்சுக்களை வெளியேற்ற உதவும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கும். உடல் கழிவுகளும் வெளியேறும்.
​கொழுப்பு அமிலங்கள்

கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. குறிப்பாக கல்லீரல் உள்ளிட்ட ராஜ உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். கடல் உணவுகளில் இந்த கொழுப்பு அமிலங்கள் அதிகமாகக் கிடைக்கும். அவை கல்லீரல் முதல் உடலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும். அதனால் உங்களுடைய உணவில் மத்தி, சால்மன், கானாங்கெழுத்தி உள்ளிடடவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாகக் கிடைக்கும்.


​பூ காய்கறிகள்

முட்டைகோஸ், காலிஃபிளவர், ப்ரக்கோலி ஆகிய பூ வடிவ காய்கறிகள் கல்லீரல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. இவற்றிலுள்ள என்சைம்கள் கல்லீரலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்றும்.


​தண்ணீர்

மேலே சொன்ன எல்லா உணவுகளைளும் விட தண்ணீருக்கு தான் உடலில் உள்ள ஒ்டுமொத்த கழிவுகளையும் வெளியேற்றும் ஆற்றல் உண்டு. உடலுக்குப் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் ஏராளமான ஆரோக்கிய மாற்றங்கள் உண்டாகும். உடலில் தண்ணீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும்போது தான் கழிவுகள் அதிகமாக சேரும். அவற்றை நீக்கி கழிவுகளை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென்றால், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

READ ON APP