Hero Image

ரோஸ்மேரி முடி வளர மட்டுமல்ல, வேறு என்னென்ன அதிசயமெல்லாம் செய்யும்னு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க!

ரோஸ்மேரியில் இயற்கையாகவே நிறைய ஊட்டச்சத்துக்களும் என்சைம்களும் இருக்கின்றன. ரோஸ்மேரி நம்முடைய கூந்தலில் நிறைய ஆச்சர்யமான மாற்றங்களை ஏற்படுத்தும். ரோஸ்மேரியில் உள்ள என்சைம்கள் முடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவி செய்யும்.
​தலைமுடிக்கு ரோஸ்மேரியின் தேவை

முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கு ரோஸ்மேரி இலைகள் உதவி செய்யும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக மெலிந்த முடிகளை திக்காக மாற்றும் தன்மை ரோஸ்மேரிக்கு உண்டு. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

ரோஸ்மேரி ஆயிலில் ரோஸ்மேரிக் அமிலம், கார்சோனிக் அமிலம், காஃபிக் அமிலம், சபோனின்கள், டானின்கள் ஆகியவை உச்சந்தலையை மிருதுவாக்கி. மடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
​ரோஸ்மேரி ஆயில் Vs ரோஸ்மேரி வாட்டர்

தலைமுடிக்கு ரோஸ்மேரியை ஆயில் மற்றும் வாட்டர் ஆகிய இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம், எது அதிக பலன்களைக் கொடுக்கும் போன்றவற்றை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். ரோஸ்மேரி இலைகளை ஃபிரஷ்ஷாகவோ அல்லது உலர்ந்த நிலையிலோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்தால் ரோஸ்மேரி வாட்டர் தயாராகிவிடும். இது லேசான பிங்க் நிறத்தில் இருக்கும். இதுவே ரோஸ்மேரி இலைகளை கோல்டு பிரஷ் முறையில் அதிலுள்ள எண்ணெயை மட்டும் பிரித்து கான்சன்ட்ரேட்டாக எண்ணெய் எடுப்பது தான் ரோஸ்மேரி ஆயில். எல்லா எசன்ஷியல் ஆயிலை போல இதுவும் எளிமையாகவே கிடைக்கும்.


​ரோஸ்மேரி ஆயில் முடி உதிர்வை தடுக்குமா?

முடி உதிர்தலைத் தடுத்து, உச்சந்தலையையும் வேர்க்கால்களையும் உறுதியாக வைத்திருக்க ரோஸ்மேரி ஆயில் உதவி செய்யும். ரோஸ்மேரி ஆயிலில் ஆன்டி - இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகம் இருக்கின்றன. அதோடு இந்த எண்ணெய் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் மாற்ற வழி செய்யும். அதோடு ரோஸ்மேரி ஆயில் பயன்படுத்தும் போது முடிக்கு கிடைக்கும் பயன்கள் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.


​தலைமுடி வளர்ச்சியை தூண்டும் ரோஸ்மேரி

ரோஸ்மேரி தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுவதில் பலருக்கு நல்ல பயனைக் கொடுத்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரோஸ்மேரி ஆயில் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, வேர்க்கால்களைத் தூண்டி, முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு முடி வளர்ச்சியை வேகமாகத் தூண்டுகிறது.


​வேர்க்கால்களை சுத்தம் செய்ய

முடியின் வேர்க்கால்கள் பலமெ இல்லாம இருக்கா? அதனால் முடி உதிர்தலும் அதிகமா இருக்கா? அப்போ அதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் வேர்க்கால்களையும் உச்சந்தலையையும் அழுக்குகள் இல்லாமல் சுத்தமாக மாற்றும். தலையில் உள்ள அழுக்குகள் முதலியவற்றை நீக்கி சுத்தமாக்குவதோடு, முடியை பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்ற ரோஸ்மேரி வாட்டர் உதவி செய்யும்.


​முடி கருமையாக வளர

வெயில், மோசமான தலைமுடி பராமரிப்பு, ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் முடியின் நிறம் மங்கி காணப்படும். சிலருக்கு இளநரை பிரச்சினை கூட ஏற்படலாம்.

இந்த பிரச்சினைகளைச் சரிசெய்து, முடியின் நிறத்தை மேம்படுத்தி, முடிக்கு நல்ல கருமை நிறத்தைக் கொடுக்கும் ஆற்றல் ரோஸ்மேரிக்கு உண்டு. ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயிலை ஏதேனும் கெரியர் ஆயிலுடன் சேர்த்து தலைக்கு அப்ளை செய்து வர முடியின் நிறம் மேம்படும்.
​பொடுகை விரட்டும் ரோஸ்மேரி

முடி உதிர்வதற்கும், தலைமுடி பலமில்லாமல் ஆவதற்கும் இருக்கும் முக்கியக் காரணங்களில் ஒன்று பொடுகு.

பொடுகை விரட்டுவதற்கு ரோஸ்மேரி முக்கியப் பங்கு வகிக்கிறது. ரோஸ்மேரி வாட்டரை உச்சந்தலையில் ஸ்பிரே செய்துவிட்டு, நன்கு மசாஜ் செய்துவிட்டு, முடியை அலசி வர, பொடுகுத் தொல்லை குறையும்.

READ ON APP