Hero Image

இன்வெர்ட்டர் பேட்டரி நீண்ட நேரம் உழைக்க எப்படி பராமரிக்கணும்.. என்ன செய்யணும்.. என்ன செய்யக்கூடாது?

Inverter Battery. பெரும்பாலான வீடுகளில் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் கோடைக்காலங்களில் மின்வெட்டை சமாளிக்க ஒரே வழி வீடுகளில் இன்வெர்ட்டர் பொருத்தி கொள்வது தான். குறைந்தது ஒரு மின்விசிறி, டிவி, கம்ப்யூட்டர், லைட் போன்றவற்றை இயக்க இவை போதுமானதாக இருக்கும். வெயில் காலங்களில் மின்வெட்டுகளின் போது கைகொடுக்கும் கடவுளாக இன்வெர்ட்டரை நினைப்பவர்கள் அதை சரியான முறையில் பராமரிக்கவும் வேண்டும்.
இதன் மூலம் இன்வெர்ட்டர் ஆயுள் நீடிப்பதோடு அவை சிறப்பாக இயங்கவும் செய்யும். உங்கள் வீட்டில் பொருத்தியிருக்கும் இன்வெர்ட்டரை நீங்கள் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதற்கான குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
​இன்வெர்ட்டர் பேட்டரியை சுத்தமாக வைத்திருங்கள்​

இன்வெர்ட்டர் பேட்டரியை வீட்டில் இருக்கும் மற்ற பொருள்கள் போன்று சுத்தமாக வைத்திருங்கள். இன்வெர்ட்டர் பேட்டரியில் சத்தம் அல்லது சேதம் போன்றவை உள்ளதா என்பதை அவ்வபோது பரிசோதியுங்கள். கேபிள்களையும் கவனியுங்கள். பேக்கிங் சோடா கலந்த நீரில் இதன் டெர்மினல்களை சுத்தம் செய்ய வேண்டும். இதனால் இன்வெர்ட்டரில் உள்ள அழுக்குகள் வெளியேறும். கேபிள்களை இணைப்பதற்கு முன்பு டெர்மினல் மற்றும் கேபிள்களில் ஈரம் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள். வழக்கமான சுத்தம் குறைந்தது மாதம் இருமுறையேனும் செய்வது ஆயுளை அதிகரிக்கும்.


​இன்வெர்ட்டர் பேட்டரி வைக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்?​

போதுமான காற்றோட்டம் இன்வெர்ட்டர் பேட்டரி வைக்கும் இடத்தில் இருக்க வேண்டும். நேரடி சூரிய ஒளி மற்றும் வெப்பத்தை உண்டு செய்யும் இடங்களிலிருந்து இதை பாதுகாப்பாக வைப்பதை உறுதி செய்யவும். இதனால் பேட்டரியின் செயல்திறன் பாதுகாப்பதோடு ஆயுளை பாதிக்கும் அதிகப்படியான வெப்பநிலை திரட்சியையும் தடுக்கும். மேலும் நெரிசலான இடம் காற்றோட்டத்தை குறைக்கிறது. பேட்டரி இயங்கும் போது வெப்பம் அதிகரிக்கும் நிலையில் வெப்பநிலை இருக்கும் இடத்தில் இருப்பது அதிகப்படியான நீர் ஆவியாக கூடும்.


​இன்வெர்ட்டர் பேட்டரிக்கு வழக்கமான சார்ஜ் செய்வது அவசியம்

​அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் போது நீண்ட நேரம் பேட்டரியை பயன்படுத்தாத போது அது பேட்டரி டிஸ்சார்ஜ் செய்யலாம். இன்வெர்ட்டர் பேட்டரி சார்ஜ் சரியாக பராமரிக்கவும். மேலும் ஆழமாக சார்ஜ் தீரும் வரை பயன்படுத்துவதை தடுக்க பேட்டரியின் சார்ஜ் சரியாக பயன்படுத்துங்கள். சார்ஜ் செய்வதற்கான இடைவெளி போன்றவற்றை வாங்கும் போதே நிறுவனங்கள் அறிவுறுத்தியிருக்கும் அதன் படி செய்வது பாதுகாப்பானது. இன்வெர்ட்டர் பேட்டரியை மாதம் ஒருமுறையேனும் பயன்படுத்தி மீண்டும் சார்ஜ் செய்து வைப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.


​இன்வெர்ட்டர் பேட்டரிக்கு குழாய் நீர் பயன்படுத்தகூடாது​

பேட்டரியை நிரப்ப அல்லது டாப் செய்ய குழாய் நீர் பயன்படுத்த வேண்டாம். இது பேட்டரிகளுக்கு ஏற்படும் எதிர்வினையை தடுக்கும். பேட்டரியின் செயல்திறனை குறைக்கும். குறிப்பாக லீட் அமில பேட்டரிகள் இருக்கும் போது தண்ணீர் அவ்வபோது நிரப்ப வேண்டும். பேட்டரியின் ஒவ்வொரு கலத்திலும் இருக்கும் நீர் அளவை சரிபார்த்து தேவைப்பட்டால் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை சேர்க்கவும். குழாய் நீரில் இருக்கும் அசுத்தங்கள் பேட்டரியின் செயல்திறனை பாதிக்க செய்யலாம். அமில அளவு குறையும் போது சார்ஜ் செய்தால் போதுமான அளவு பேக்கப் கிடைக்காது. அதனால் இன்வெர்ட்டர் அமில அளவு எப்போதும் சரியாக வைத்திருக்க வேண்டும்.


​இன்வெர்ட்டர் பேட்டரி ஆபத்தானவையா​

குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளின் அருகில் இன்வெர்ட்டர் பேட்டரி வைக்க வேண்டாம். இது ஆபத்தானவை. இவை சல்பூரிக் அமிலத்தை கொண்டுள்ளன. இது அதிக அரிக்கும் தன்மை கொண்டவை. மேலும் பேடரி நச்சுப்புகைகளை வெளியிடுகின்றன. அதனால் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இருந்தால் பேட்டரியை அவர்களிடமிருந்து தள்ளி பொருத்துங்கள்.


​இன்வெர்ட்டர் பேட்டரிக்கு அதிக சுமை வேண்டாம்​

இன்வெர்ட்டர் பேட்டரிகள் குறிப்பிட்ட திறனை கொண்டுள்ளன. தாங்கள் பயன்படுத்த விரும்பும் மின்னணு பொருள்களுக்கு ஏற்ப இதை பயன்படுத்த வேண்டும். அதே போன்று தேவைப்படும் வாட்ஸை விட சற்று அதிகமான திறன் கொண்ட இன்வெர்ட்டர் தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் மின்சேமிப்பு கொண்ட பேட்டரிகளாக பயன்படுத்த முடியும். இன்வெர்ட்டரின் சுமையை விட அதிக பொருள்களை பயன்படுத்துவது அதன் ஆயுளை குறைக்கும். ஓவர் லோடிங் எப்போதும் தவிருங்கள்.


​இன்வெர்ட்டர் பேட்டரி எப்போது மாற்ற வேண்டும்?​

உங்கள் வீட்டு இன்வெர்ட்டர் பேட்டரியை சரியான முறையில் பராமரித்தாலும் ஒவ்வொரு பேட்டரியின் ஆயுட்காலமும் குறிப்பிட்ட ஆண்டுகள் வரைதான். அதனால் பேட்டரியின் ஆயுள் காலம், வயது மற்றும் செயல்திறன் கண்காணிப்பது முக்கியம். பெரும்பாலான இன்வெர்ட்டர் பேட்டரிகள் பராமரிப்பை பொறுத்து 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும். குறிப்பிட்ட ஆண்டுகளில் பேட்டரிகளை மாற்றுவதையும் உறுதி செய்யுங்கள்.

READ ON APP