Hero Image

89 தொகுதிகளில் நாளை நடக்கிறது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.. களைகட்டும் ஸ்டார் தொகுதிகள் ! எங்கேங்கே தெரியுமா ??

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 துவங்கியது. மொத்தம் 7 கட்டங்களில் இந்திய மக்களவைத் தேர்தல் நடக்கிறது. ஜூன் 1 வரை வாக்குப்பதிவு நடக்க, ஜூன் 4 வாக்குகள் எண்ணப்பட்டு அன்று முடிவுகளும் வெளியாகிறது. கடந்த ஏப்ரல் 19 நடந்த முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள், பாண்டிச்சேரியின் ஒரு தொகுதி மட்டுமல்லாது மற்ற மாநிலங்களின் 102 தொகுதிகள் என, 141 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் அரசியல்வாதிகள் அடுத்த கட்ட தேர்தலை சந்திக்கும் மாநிலத்தில் கவனம் செலுத்த துவங்கினார்கள். செல்ஃபி எடுக்கும்போது எரிமாலைக்குள் விழுந்த இளம் பெண் : சிதைந்த நிலையில் கிடைத்த சடலம் !அந்த வகையில், நாளை (ஏப்ரல் 26 ) மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அசாம், பிஹார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு ஆகிய 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
13 மாநிலங்களில் சுமார் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இவற்றுள், தமிழ்நாட்டைப் போலவே, கேரளாவிலும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது. கேரளாவில் மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், மத்திய பிரதேசத்தில் நாளை தேர்தலை சந்திக்கவிருந்த ஒரு தொகுதியின் வேட்பாளர் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததால் அந்த தொகுதியின் வாக்குப்பதிவு மூன்றாம் கட்ட தேர்தல் நடக்கும் மே 7 அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்தலில் இருந்த நட்சத்திர வேட்பாளர்கள் போலவே இரண்டாம் கட்டத்திலும் ஸ்டார் தொகுதிகளும் ஸ்டார் வேட்பாளர்களும் இருக்கிறார்கள். அதில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக இரண்டாவது முறையாக களமிறங்கி இருக்கும் ராகுல் காந்தி, கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய ஜல் சக்தித்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்தரசேகர் போட்டியிடுகிறார்கள். ராகுல் காந்தி நேரு குடும்பமா ? அவருக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கணும்: எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!
மேலும், நடிகரும் பாஜக முக்கிய நிர்வாகியுமான சுரேஷ் கோபி கேரளாவின் திரிச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூரியா, கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு தொகுதியிலும், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பாஜகவுடனான கூட்டணியின் மாண்டியா தொகுதியிலும், நடிகை ஹேம மாலினி உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியிலும், ராமாயணம் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற இளைஞர் பலி : அதிரடி முடிவெடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியம்..
கலைக்காட்டும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் வாக்குச்சாவடிகள் இருக்கும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. எக்கச்சக்கமான போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும், மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில், ஜூன் 4 தேர்தலின் முடிவுகள் வெளியாகிறது.

READ ON APP