Hero Image

பெங்களூரு மக்கள் ஷாக்... பஸ் டிக்கெட் விலை 2,700 ரூபாய் வரை ஏறிடுச்சு... சிக்கலில் தேர்தல் பிளான்!

கர்நாடகா மாநிலத்தில் வரும் 26ஆம் தேதி வெள்ளி அன்று 14 மக்களவைத் தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தக்‌ஷின கன்னடா, உடுப்பி சிக்கமகளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை சேர்ந்த தொகுதிகளும் அடங்கும். இந்நிலையில் பெங்களூருவில் கல்வி, வேலை, வர்த்தகம் உள்ளிட்டவற்றுக்காக கடலோர மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பலரும் வசித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் வாக்குப்பதிவுஇவர்கள் ஏப்ரல் 26 அன்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. நாளை மாலை பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஆன்லைனில் தனியார் பேருந்துகளை முன்பதிவு செய்ய தேடினால் பெரும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. ஒரு டிக்கெட் விலை 2,700 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பேருந்து டிக்கெட் கட்டணம்குறிப்பாக பெங்களூருவில் இருந்து மங்களூரு மற்றும் உடுப்பி செல்வதற்கு தான் அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதுசரி, அரசு பேருந்துகள் இல்லையா? என்று கேட்கலாம். இருக்கிறது. பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 25ஆம் தேதி பயணத்திற்கு ஆன்லைன் முன்பதிவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மங்களூரு மண்டலத்தில் கூடுதலாக 100 பேருந்துகளை KSRTC அறிவித்துள்ளது. பெங்களூருவில் சிறப்பு ஏற்பாடு
ஆன்லைன் எதிர்பார்ப்பை பொறுத்தை கூடுதல் பேருந்துகளை இயக்கவும் தயாராக இருக்கிறது. சமீபத்திய தகவல்களின் படி, KSRTC மற்றும் BMTC ஆகிய நிர்வாகங்கள் சுமார் 4,500 சாதாரணப் பேருந்துகளை தேர்தல் பயன்பாட்டிற்கு அளித்துள்ளது. பெங்களூரு மாநகருக்குள் மட்டும் 1,700 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மற்ற மாவட்டங்களில் தேவைக்கேற்ப 2,100 முதல் 2,700 பேருந்துகள் வரை இயக்க திட்டமிட்டுள்ளனர். டிக்கெட் முன்பதிவுஅடுத்த இரண்டு நாட்களுக்கு சில சிரமங்கள் ஏற்படலாம். இருப்பினும் நிலைமையை நிச்சயம் சமாளித்து விடுவோம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் இரண்டு சிறப்பு ரயில்களை ஏப்ரல் 25ஆம் தேதி அன்று இயக்குகிறது. கேப்களுக்கு அறிவுறுத்தல்
எனவே பயணிகளுக்கு சிரமம் இருக்காது என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்பவர்களுக்கு தான் சிக்கல் என்கின்றனர். இதற்கிடையில் கேப்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கு சில அறிவுறுத்தல்களை பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் சுற்றுலா பயணிகளை பிற்பகல் வேளையில் பிக்கப் செய்து கொள்ளுங்கள். பிற்பகல் நடவடிக்கைகாலை வேளையில் வாக்களிக்க செல்லும் வகையில் கேப்களை இயக்கினால் நன்றாக இருக்கும். ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட பயணிகளிடம் தெளிவாக கூறி விடுங்கள். பிற்பகல் வேளையில் தான் வர முடியும் எனச் சொல்லிவிடுங்கள். மக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

READ ON APP