Hero Image

வருத்தினி ஏகாதசி 2024 : ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்த பலனை தரும் அற்புத ஏகாதசி

ஏகாதசி என்பது மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய மிக முக்கியமான விரத நாளாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்ட முறை ஏகாதசி வருவதுண்டு. இந்த ஏகாதசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயரும், ஒவ்வொரு தனியான புராண கதையும், தனியான விரத பலன்களையும் தரக் கூடியதாகும். அப்படி சித்திரை மாத தேய்பிறையில் வரக் கூடிய ஏகாதசிக்க வருத்தினி ஏகாதசி என்று பெயர்.
இத மிகவும் அற்புத பலன்களை தரக் கூடிய ஏகாதசி ஆகும்.வருத்தினி என்றால் பாதுகாப்பது என்று பொருள். இந்த ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் இந்த பிறவில் மட்டுமின்றி இதற்கு முந்தைய பிறவிகளிலும் செய்த பாவங்களில் இருந்து விடுவிக்கப்படுவதுடன், பிறப்பு-இறப்பு இல்லாத நிலையான மோட்ச நிலையை அடைய முடியும். பல நூற்றாண்டுகள் தவம் செய்த பெரும் புண்ணிய பலனைத் தரக் கூடிய வருத்தினி ஏகாதசி விரதம் ஆகும். இந்த ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் அனைத்து விதமான பிரச்சனைகள், தீமைகள் ஆகியவை நெருங்காமல் பாதுகாக்கப்படுவார்கள் என்பது பொருள்.
ராகு காலத்தில் எதற்காக துர்க்கையை வழிபட வேண்டும் ?புராணங்களின் படி, ஆணவம் கொண்ட பிரம்ம தேவரின் ஐந்தாவது தலையை சிவ பெருமான் வெட்டி எடுத்தார். இதனால் சாபம் மற்றும் தோஷத்திற்கு ஆளான சிவ பெருமான், வருத்தினி ஏகாதசியில் விரதம் இருந்து தன்னுடைய பாவங்களில் இருந்து விடுபட்டதாக சொல்லப்படுகிறது. வருத்தினி ஏகாதசியில் எவர் ஒருவர் உண்மையான பக்தியுடன் விரதம் இருக்கிறார்களோ, அவர்கள் பல நூற்றாண்டுகள் கடும் தவம் இருந்த பலனுக்கு இணையான பலன்களை பெறுவார்கள் என்பது நம்பிக்கை.இத்தகைய சிறப்பு வாய்ந்த வருத்தினி ஏகாதசி, இந்த ஆண்டு மே 04ம் தேதி சனிக்கிழமை வருகிறது.
மே 03ம் தேதி இரவு 08.37 மணி துவங்கி, மே 04ம் தேதி மாலை 06.10 வரை ஏகாதசி திதி உள்ளது. பாரணை செய்வதற்கான நேரமாக மே 05ம் தேதி காலை 05.37 முதல் 10.04 மணி வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது. பெருமாள் வழிபாட்டிற்குரிய சனிக்கிழமையில் ஏகாதசி விரத நாளும் இணைந்து வருவதால் இது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. வருத்தினி ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, பெருமாளுக்கு விளக்கேற்றி, துளசி படைத்து பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் உபவாசமாக இருப்பது நல்லது.
முடியாதவர்கள் கண்டிப்பாக அரிசி உணவுகளை தவிர்த்து விரதம் இருக்கலாம். அன்று குறைவாக பேசுவதுடன் யாருடனும் சண்டை போடவோ, கோபப்படவோ கூடாது. பெருமாளின் நினைவிலேயே இருந்து, கிருஷ்ண மகா மந்திரத்தை சொல்லியபடி இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் குறைவாகவே தூங்க வேண்டும்.

READ ON APP