Hero Image

ஆஞ்சநேயர் கவசம் : துன்பங்களை போக்கி, ஆரோக்கியத்தை தரும் அற்புத மந்திரம்

ஸ்ரீராம பிரானின் தீவிர பக்தரான ஆஞ்சநேயர், வீரம், உடல் பலம், வெற்றி ஆகியவற்றை வழங்கும் தெய்வமாக கருதப்படுகிறார். சனி பகவானால் பிடிக்க முடியாத தெய்வ ம் என்பதால் ஆஞ்சநேயரை வழிபட்டால் எந்த கிரகத்தால் ஏற்படும் எந்த தோஷமும் எதுவும் செய்யாது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு கவசப் பாடல் இருப்பது போல் ஆஞ்சநேயருக்கும் கவசப் பாடல் உள்ளது.
இதை அனுமனுக்குரிய சனிக்கிழமை, அமாவாசை, மூல நட்சத்திரம் வரும் நாட்களில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால், எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலுமக் வா்க்கையில் இருந்து விலகி விடும். நெருக்கடியான சூழ்நிலையில் கூட இந்த கவசம், நம்மை கவசம் போல் இருந்து காக்கும். ஆஞ்சநேயர் கவசம் : துதிப்பயன் :அஞ்சனை மைந்தன்அனுமனை போற்றிடின்நெஞ்சினில் பலம் வரும்வஞ்சனை போக்கிடும்வாயுவின் புத்திரனால்வல்வினை நோய் தீரும் நிஜம். அனுமன் கவசம் பாடல் வரிகள் :சிரஞ்சீவி அனுமன் என் சிரசினை காக்கஸ்ரீராம பக்தன் என் சீர் சடை காக்க. நெறி மேவி நின்றவன்என் நெற்றியை காக்கபுவியினில் நீண்டவன்என் புருவங்கள் காக்கஇமயத்தில் நிற்பவன் என் இமைகளைக் காக்கசமயத்தில் வந்தெனை சடுதியாய் காக்கவீரத்தின் வீரன் என் விழிகளைக் காக்கவீசிடும் காற்றோன் என் விழிமூடிகளைக் காக்க பங்குனி மாத பெளர்ணமி 2024 : ஆண்டின் மிகவும் அதிர்ஷ்டமான நாள் இது தானாம்...ஏன் தெரியுமா?நாரணப் பிரியன்என் நாசியை காக்ககாரணப் பொருளே என் காலமே காக்கமுழுஞானம் கொண்டவன்என் மூக்கினை காக்கவாக்கிலே வல்லவன் என் வாயினை காக்கவெற்றிலை பிரியன்என் வெற்றியை காக்கபற்றியே வந்தெனை பற்றுடன் காக்கபல் வித்தை கற்றவன் என் பற்களைக் காக்கநல் மனம் கொண்டவன்என் நாவினைக் காக்கநாடியே வந்தென்றன் நாடியை காக்கதேடியே வந்தென்னை தேவனே காக்ககரிமலை கடந்தவன் என் கன்னங்கள் காக்ககடுகதியில் வந்தே என் கழுத்தினை காக்ககயிலையின் வாசன் என் கைகால்கள் காக்ககதிரவனின் மாணவன் கருணையாய்க் காக்கநல்லருள் செய்பவன் என் நகங்களைக் காக்கஅல்லன அழிப்பவன்என் அகம் தனை காக்கநெடு மேனியானவன்என் நெஞ்சினைக் காக்கசுடு அக்னி வென்றவன் என் சூட்சுமம் காக்கஇடுக்கண் களைபவன் என் இடுப்பினை காக்கஇரு கண்ணின் மணிகளை இருட்டிலும் காக்கதோள் வலிவு கொண்டவன் என் தோள்களை காக்கதோன்றிய புகழவன்என் தொடைகளைக் காக்ககுரங்கினத் தலைவன்என் குறியினைக் காக்ககுருவாகி வந்துஎன் குருதியை காக்கதிசையெல்லாம் திரிந்தவன்என் தசையினை காக்கவிசையென்ப பாய்ந்து என் செவிகளை காக்கஒன்பது வாசலை ஒப்பிலான் காக்கபுண்படா வண்ணம் புண்ணியன் காக்கஇளமையும் முதுமையும் இனியவன் காக்கஇரவிலும் பகலிலும் இமையெனவே நீ காக்க
உலகத்தின் நாயகன் என் உயிரினைக் காக்ககலகத்தில் இருந்தென்னை கதி தந்து காக்கநிலையற்ற வாழ்வினில் நிமலனார் காக்கசிலையென இருந்தென்னை சீலனார் காக்கஇராமனின் பக்தன் என் இதயத்தை காக்கசுக்ரீவன் தோழன் என் சுவாசத்தை காக்கஉடல் உள்ளம் என்றுமே உறுதியாய் காக்ககடல்தாண்டி வந்தவன் என் குடல்களைக் காக்கவளமிக்க வாழ்வினை வாயுமகன் காக்கவாழையடி வாழையாய் வாழ்திடக் காக்கஎம்மை அந்நாளும் உன் நிழலினால் காக்கஇம்மையிலும் மறுமையிலும் ஈடிலான் காக்கநோய் நொடிகள் வாராமல் நொடியினில் காக்கதாய்போலவே தயவுடன் என் மேனி காக்கநவகோளின் தோஷம் நீக்கி நாளும் நீ காக்கதவக்கோலம் கொண்டவன் தயவுடன் காக்கதீராத நோய்களைத் தீர்த்து நீ காக்க காக்கதீராத செல்வங்கள் வந்திடக் காக்க காக்கஈரேழு புவனத்து உறவுகள் காக்கபாராளும் மன்னர்கள் நட்புகொள் காக்கபஞ்ச பூதங்கள் எனைப் பகைக்காது காக்கவஞ்சங்கள் சேராது என் மனம் தனை காக்கபில்லி பேய் சூன்யங்கள் நெருங்காது காக்கபிள்ளை என்றனை நீ பிரியமாய் காக்கஅரக்கர்கள் பூதங்கள் அண்டாமல் காக்கஇரக்கமறு மாந்தர்கள் எதிர்இன்றி காக்கசிறைசென்று வாடாமல் சீருடன் காக்கமறையெலாம் போற்றும் உந்தன் மலரடிகள் காக்க இல்லாமை நீக்கி எனை இறைவா நீ காக்கபொல்லாத பசி எனை அண்டாது காக்க கடன் தொல்லை தீர்த்தெனை கருணையே காக்ககலியுகக் கொடுமைகள் கழிந்திடக் காக்கசெய்தொழில் கருமங்கள் செய்வதை காக்கமெய் வருந்தாமல்எனை மேன்மையாய் காக்கபுலத்திலும் நிலத்திலும் புத்திரனாய் நீ காக்கதவத்திலே வந்து உன் தனையன் எனைக் காக்ககொடுவிஷ ஜந்துகள் கொட்டாது காக்ககொடுமைகொள் நுண்ணுயீர் வாட்டாது காக்கவானமும் வையமும் வளம் பெறக் காக்கதானமும் தர்மமும் தழைத்திடக் காக்கநல்லோர்தம் உறவுகள் நலிவின்றி காக்கவல்லோரும் எனை கண்டு வணங்கிட காக்ககனவிலும் நனவிலும் கருத்துடன் காக்கஉன் நினைவுகள் நீங்காது நிலைபெறக் காக்கமானத்தில் பங்கங்கள் நேராது காக்கஊனத்தில் துவண்டிங்கு வாடாது காக்கநீள்ஆயுள் நிறைசெல்வம் தந்தெனை காக்கவால் கொண்ட மணியினால் வந்தென்னை காக்கமரணத்தின் வாசலில் மாருதி காக்கசரணத்தை தந்தெனை அரணெனக் காக்கபிறவிப் பிணியதை தீர்த்து நீ காக்கபிறவாமை தந்தெனை பிரியமாய்க் காக்கமுனிவரும் தேவரும் எனக்கு அருள் செய்யக் காக்கபனிதரும் திங்களென ஒலி தந்து நீ காக்கஇனிவருங் காலங்கள் இனித்திடக் காக்கபிணி ஏதும் வருந்தாமல் என் அணி செய்து காக்கபார்க்க நீ பார்க்க உன் திருவிழிகள் பார்க்க என்பாவங்கள் போக்க உன் இருவிழியால் பார்க்கதீர்க்க நீ தீர்க்க என் தீவினைகள் தீர்க்கதீர்க்கத் தீர்க்க உன் திருவிழியால் பார்க்கவார்க்க நீ வார்க்க உன் அருளினை வார்க்ககாக்க நீ காக்க உன் கதி தந்து காக்கஆஞ்சநேயனே காக்க வாயுமைந்தனே காக்கராம பக்தனே காக்க ராம பக்கதனே காக்கஸ்ரீராம தூதனே காக்க ஜெயராம தூதனே காக்க.

READ ON APP