Hero Image

ஹோலி பண்டிகை 2024 வாழ்த்துக்கள் : வாழ்க்கை வண்ணமயமாக வாழ்த்துவதற்கான வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் படங்கள்

ஆரம்பத்தில் வட மாநிலத்தவர்கள் மட்டும் கொண்டாடும் பண்டிகையாக இருந்த ஹோலி பண்டிகை தற்போது அனைத்து மாநிலத்தவர்களும் கொண்டாடும் உற்சாகமான பண்டிகையாக மாறி விட்டது. இது கொண்டாட்டத்திற்கு மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. குளிர்காலத்தின் இறுதியில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை அரங்கபஞ்சமியுடன் நிறைவடைகிறது.

ஹோலி 2024 கொண்டாட்டம் :

இந்துக்களால் உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலிப் பண்டிகை. வண்ணங்களின் பண்டிகையான இது ஆண்டுதோறும் மார்ச் மாத பெளர்ணமி நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை 15 நாள் உற்சவமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஹோலிக்கு முந்தைய நாள் இரவு ஹோலிகா தகன் கொண்டாடப்படும். இதனை சோட்டா ஹோலி என்றும் கொண்டாடுவார்கள்.


வண்ணங்களின் திருவிழா :

இறைவன் தீமையை அளித்து, நன்மையை வெற்றி கொண்டதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஹோலி கொண்டாடப்படுவதாகவும், சிவ பெருமான் காசிக்கு வந்த நாளை பக்தர்கள் வண்ணப் பொடிகள் தூவி வரவேற்ற நிகழ்வினை கொண்டாடும் விதமாகவே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கான புராண காலத்து காரணங்கள் கதைகள் சொல்லப்படுகின்றன. இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை அனைவரின் வாழ்வையும் வண்ணமயமாக மாற்ற வேண்டும் என அனைவரையும் வாழ்த்தி மகிழ்வதற்கான வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் படங்கள் இதோ...


ஹோலி பண்டிகை :
ஹோலி வாழ்த்துக்கள் :
அனைவரின் வாழும் வண்ணமயமாக வாழ்த்துக்கள் :
மகிழ்வான ஹோலி :
இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் :

READ ON APP