Hero Image

நினைத்ததை நிறைவேற்றும் சித்திரை மாத வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு

சக்தியின் அம்சமான அம்மனை வழிபடுவதற்கு வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகள் ஏற்றதாகவும், மாதங்களில் ஆடி மாதம் உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதே போல் சித்திரை, வைகாசி மாதங்களும் அம்மன் வழிபாட்டிற்கு ஏற்ற மாதங்களாக சொல்லப்படுகின்றன. அம்மன் வழிபாடு வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் நீங்க செய்து, வாழ்வில் சுபிட்சம் பெருகும், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பொதுவாக அனைத்து விதமான தெய்வ காரியங்களையும் வழிபடுவதற்கு வெள்ளிக்கிழமை மிக உகந்த நாளாகும். வாழ்வில் முன்னேற்றமில்லாமலும், ஒருவிதமான குழப்பத்துடனும், அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமலும் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். சித்திரை மாதம் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாக சொல்லப்படுவதால், இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாட்டிற்கு அதிக பலன் உண்டு.
வீட்டில் செல்வம் பெருக குபேரரை இப்படி வழிபடுங்க வெள்ளிக்கிழமையில் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபாடு செய்வது நல்லது. முடிந்த வரை தானத்தில் சிறந்த தானமான அன்னதானம் செய்யலாம். இது வெயில் காலம் என்பதால் நீர் மோர், கூழ் போன்றவற்றை கோவிலுக்கு வருபவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கவசம், அம்மன் துதி போன்றவற்றை பாராயணம் செய்வது அம்மனின் அருளைப் பெற உதவும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கு முன் விளக்கேற்றி வழிபடலாம்.வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கோ அல்லது விளக்கிற்கோ குங்குமத்தால் அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு செய்யும் போது அம்பிகைக்கு விருப்பமான மாவிளக்கு, சர்க்கரை பொங்கல், கூழ் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வாசனை மலர்களை அம்பிகைக்கு சூட்டி வழிபடுவது நல்லது. வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு எலுமிச்சை மாலை, வேப்பிலை மாலை ஆகியவற்றை உங்களின் கைகளால் கட்டிக் கொண்டு போய் சாத்துவது, நினைத்த காரியங்களை நிறைவேற செய்யும்.இவ்வாறு தொடர்ந்து வெள்ளிக்கிழமைதோறும் அம்மனை வழிபாடு செய்து வர திருமண பாக்கியம் கைகூடும், நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்போருக்கு நல்ல அறிவாற்றலுடனும், புத்திக்கூர்மையுடனும் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
அம்மன் வழிபாட்டினை தொடர்ந்து செய்து வந்தால் எந்த மாந்திரீகம், பில்லி, சூனியம், ஏவல் போன்றவை நம்மை நெருங்காது. எதிரிகள் அழிவார்கள். அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். தோல்வி என்பது ஏற்படாது. பெண்கள் தொடர்ந்து வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வந்தால் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

READ ON APP