Hero Image

CSK: 'முஷ்தபிசுர் பாதியில் விலகுது உறுதி'.. மாற்று பௌலர் இவர்தான்: ஆஸ்திரேலிய 'அசுரனை' வாங்க திட்டம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ளதால், ஐபிஎலில் இருந்து முஷ்தபிசுர் ரஹ்மான் விலக உள்ளார்.
முஷ்தபிசுர் ரஹ்மான் அபாரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் முஷ்தபிசுர் ரஹ்மான், சிஎஸ்கேவுக்காக தனது முதல் லீக் ஆட்டதிதல், ஆர்சிபிக்கு எதிராக 29 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்களை கைப்பற்றி, மேட்ச் வின்னராக இருந்தார்.


10 விக்கெட்கள்:

இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி, 8.83 எகனாமியில் 10 விக்கெட்களை சாய்த்துள்ளார். குஜராத்துக்கு எதிராக 2/30 விக்கெட்களையும், டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக 1/47 விக்கெட்டையும் எடுத்துள்ளார்.


4ஆவது போட்டியில் விலகல்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3-ல் இரண்டு வெற்றிகளை பெற்ற பிறகு, நான்காவது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முஷ்தபிசுர் ரஹ்மான் விளையாடவில்லை.


வங்கதேசம் சென்றார்

சன் ரைசர்ஸுக்கு எதிராக விளையாடாமல், முஷ்தபிசுர் ரஹ்மான் வங்கதேசம் சென்றார். டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்காக, விசா விண்ணப்பிக்க சென்றார். அதன்பிறகு உடனே சிஎஸ்கேவுக்கு விளையாடினார்.


ஏப்ரல் 30 வரை மட்டுமே:

முஷ்தபிசுர் ரஹ்மானுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே, ஐபிஎலில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. அனுமதியை நீட்டிக்க முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்தால், மே 1ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.


காரணம் என்ன?

வங்கதேச அணி, மே 3ஆம் தேதி முதல் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்பிறகு டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி இருப்பதால், முஷ்தபிசுரை ஏப்ரல் 30ஆம் தேதி, நாடு திரும்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்பட்டது.


மே 1 வரை:

இந்நிலையில், மே 1ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட அனுமதிக்க வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ மற்றும் சிஎஸ்கே கேட்டுக்கொண்ட நிலையில், அதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது.


மாற்று பௌலர் யார்?

சிஎஸ்கேவில் முஷ்தபிசுருக்கு மாற்றான வெளிநாட்டு பௌலர் இல்லை. ஷர்தூல் தாகூர், முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேர் ஆகிய உள்நாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர்தான், முஷ்தபிசுருக்கு மாற்றாக விளையாட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

READ ON APP