Hero Image

கடலுரில் பெண் படுகொலை.. ஸ்டாலின் முதலில் திமுகவினரிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாத்தணும்.. எகிறி அடித்த அண்ணாமலை!

தமிழகத்தில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே, வாக்களித்தது தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தகராறில் ஜெயக்குமார் என்பவரின் குடும்பத்தினர் மீது அப்பகுதியை சேர்ந்த சிலர் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர், இதில் ஜெயக்குமார், அவரது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் அவரது தம்பி என 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஜெயக்குமாரின் மனைவி கோமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் விட்ட வார்த்தை... மீண்டும் பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்!இதுதொடர்பாக அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கேரளா விஷூ பம்பர் லாட்டரி டிக்கெட்ட இப்படி வாங்குங்க.. ரூ. 12 கோடியை அள்ளும் வாய்ப்பு அதிகமாம்!தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளா. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை என்றும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
மக்கள் அந்த மனநிலைக்கு வந்துட்டாங்க... தேர்தல் ஆணையம் அதை செய்யல.. பிரேமலதா திடுக்!மேலும் அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது என்றும் அண்ணாமலை சாடியுள்ளார். இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும் என்றும் காட்டமாக கூறியுள்ள அண்ணாமலை உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

READ ON APP