இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. மாணவர்கள் உற்சாகம்!
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பிராந்தியங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, தசரா, விஜயதசமி கொண்டாட்டங்கள் நிறைவுக்கு வந்துள்ளன. நாளை சனி, ஞாயிறு என்பதால் இன்று விடுமுறை அறிவிக்க தமிழக அரசுக்கு ஊழியர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இன்று அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டால் சனி, ஞாயிறு சேர்த்து 5 நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும் என தமிழக அரசு ஊழியர்களும், ஆசிரியர்கள், மாணவர்களும் எதிர்பார்த்தனர்.
ஆனால், தமிழக அரசு இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாததால் இன்று தமிழகத்தில் முழு வேலை நாளாக இருக்கிறது. அதே சமயம் புதுச்சேரியில் இன்று அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பிராந்தியங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை தொடர் விடுமுறையை அடுத்து இன்றும் புதுச்சேரியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுவையில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை தினங்களாக அமைந்துள்ளன.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?