குட் நியூஸ்... இனி காசோலை செலுத்தினால் ஒரு மணி நேரத்தில் பரிவர்த்தனை!
இனி வங்கிகளில் காசோலை செலுத்தினால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செலுத்தப்படும் காசோலைகள் உடனுக்குடன் ஸ்கேன் செய்து பரிசீலிக்கப்படும். ஒரு மணி நேரத்திற்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் சேர்க்கப்படும்.
மேலும், காலை 11 மணி முதல் வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் ஒவ்வொரு மணி நேரத்திலும் நடைபெறும். இதில் டெபாசிட் செய்யப்பட்ட காசோலைகளை மாலை 7 மணிக்குள் வங்கிகள் பரிசீலிக்க வேண்டும், தவறினால் அந்த காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பணம் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
1980களில் காசோலை பரிசீலிக்க ஒரு வார காலம் எடுத்துக்கொண்ட நிலையில், பின்னர் அது 3 நாட்களாக, அதன் பின் 2008 ல் ஒரு நாளாக குறைக்கப்பட்டது. அது ஒரு மணி நேரத்தில் முடிவடைகிறது.இந்த சீர்திருத்தம் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. பயனாளிகளின் வசதிக்காக பணம் உடனுக்குடன் கிடைக்கப்பெறுவதோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கும் அதிவேக வளர்ச்சியை உறுதி செய்யும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?