பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்... டிசிஎஸ் அதிரடி!

Hero Image
Newspoint

இந்தியாவின் முண்ணனி தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்   2026-ம் ஆண்டில் 2 சதவீத ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன்படி சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.இந்நிலையில்  டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்படும். அவர்களின் பணி அனுபவத்தை பொறுத்து 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Newspoint

இதன்படி 8 மாதங்களுக்கு மேல் பணி ஒதுக்கப்படாமல் இருக்கும் ஊழியர்களுக்கு சிறிய அளவிலான இழப்பீடு மட்டுமே கிடைக்கும். 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த  ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கான ஊதியம் கிடைக்கும். அதற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு  24 மாதங்களுக்கான ஊதியம் கிடைக்கும் எனக்  கூறப்படுகிறது.

Newspoint

பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள், புதிய வேலைவாய்ப்புகளை தேடுவதற்கு தேவையான உதவிகளை டிசிஎஸ் வழங்கும். மேலும் ஓய்வு பெறும் வயதில் இருப்பவர்கள், விருப்ப ஓய்வு திட்டத்தில் நிறுவனத்தில் இருந்து வெளியேற ஏற்பாடு செய்யப்படும் என டிசிஎஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?