ரூ.90,000 நெருங்கும் சவரன் விலை... மாலையில் தங்கம் விலை உயர்வு!

Hero Image
Newspoint

 

இன்று காலையில் சவரனுக்கு ரூ.880 தங்கம் விலை குறைந்த நிலையில், மாலையில் உயர்ந்துள்ளது. விரைவில் ரூ.90,000 யை சவரன் தொட்டு விடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

Newspoint

தொடர்ந்து தங்கம் விலை உச்சத்திலேயே பயணித்து வரும் நிலையில், கடந்த 1ம் தேதி ரூ.87 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை சற்று குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் அதிகரித்தது. 

இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880-ம், கிராமுக்கு ரூ.110-ம் அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.86,720-க்கும், ஒரு கிராம் ரூ.10,840-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. 

Newspoint

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.87,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?