Hero Image

#JUST IN : சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு..!


சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த நான்காம் தேதி தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்யப்பட்டது. மேலும், அவரை நேர்காணல் செய்த பெலிக்ஸ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரையும் கைது செய்தனர். தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

அவர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெலிக்ஸின் யூடியூப் சேனலில், முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சவுக்கு சங்கர் மீது, ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக, தற்போது சவுக்கு சங்கர் திருச்சி அழைத்து செல்லப்படுகிறார்.

READ ON APP