ராமனாக ராகுல்... ராவணனாக அமலாக்கத்துறை... காங்கிரசின் சர்ச்சை போஸ்டர்!
உத்தரப்பிரதேசத்தில் வெளியான கேலிச்சித்திரம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் நிர்வாகி ஆர்யன் மிஸ்ரா வரைந்த அந்தச் சித்திரத்தில், ராமர் வேடத்தில் வில்லுடன் நிற்க, எதிரே 10 தலைகளுடன் ராவணன் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
அந்தத் தலைகளில் ஒன்றாக அமலாக்கத்துறை, மற்றவை சிபிஐ, தேர்தல் ஆணையம், வாக்குத் திருட்டு பிரச்சினை உள்ளிட்டவையாக காட்டப்பட்டுள்ளன.
இந்த சித்திரம் குறித்து ஆர்யன் மிஸ்ரா விளக்குகையில், “அநீதிக்கு எதிராகப் போராடுபவர் ராமர். அதுபோல வறியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக குரல் கொடுப்பவர் ராகுல் காந்தி. இன்றைய பிரச்சினைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு ராவணனாகவே உள்ளன. வாக்குத் திருட்டு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழல் போன்றவை மக்களை சுரண்டிக்கொண்டிருக்கின்றன. இவற்றையே ராவணனின் தலைகளாக சித்தரித்தேன்” என்றார்.
மேலும், “இன்றைய அரசியல் சூழலில் ராகுல் காந்தி ராமரின் பாதையை பின்பற்றுபவர் போல உள்ளார். ராமர் ராவணனை வீழ்த்தியது போல, மக்களின் பிரச்சினைகளை அவர் தீர்க்குவார். 2027-இல் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கொடி நட்டுவார்” எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கேலிச்சித்திரம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பாஜக ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.