காங்கோ முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை விதிப்பு: ஆனாலும் ஒரு சிக்கல்..?
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கள் மற்றும் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சி குழுக்கள், பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப்படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அதன்படி, காங்கோவில் எம்23 என்ற கிளர்ச்சிக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சிக்குழுவுக்கு அண்டை நாடான ருவாண்டா ஆதரவு அளித்து வருகிறது.
காங்கோவில் 2001 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ராணுவ ஆட்சி நடைபெற்றது. அப்போது, ராணுவ தளபதி ஜோசப் கலிபா நாட்டின் அதிபராக செயல்பட்டு வந்தார். அதன்பின்னர், அவரது ஆட்சி கவிழ்ந்ததை, அடுத்து அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்ற நிலையில், ஆனாலும், எம்23 கிளர்ச்சிக்குழுவுக்கு ஜோசப் ஆதரவு அளித்து வருகிறார். அவர் சமீபத்தில் எம்23 கிளர்ச்சிக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், தனது ஆட்சி காலத்தில் ஜோசப் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேச துரோகம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலை, பாலியல் வன்கொடுமை, சித்ரவதை மற்றும் கிளர்ச்சி உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக அந்நாட்டு ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதனையடுத்து, ஜோசப் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், ஜோசப் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டது உறுதியானதால், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, ஜோசப் தலைமறைவாக உள்ளதால் அவரை கைது செய்து தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.