2026 தேர்தல் திமுகவுக்கு OUT OF CONTROL - தான் - பாஜக பதிலடி!
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கள்ளக்குறிச்சியில் 68 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த போது, எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 9 தொழிலாளர்கள் இறந்த போது செல்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வர்கள், கரூருக்கு செல்வதில் மட்டும் காட்டிய வேகத்தின் காரணம் என்ன?
நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயலன்றி வேறில்லை!
கூடா நட்பு கேடில் முடியும் என்று சொல்லி விட்டு காங்கிரஸ் கட்சியோடு கரம் கோர்த்தவர்கள், அந்த கட்சியின் தலைவரை கொன்ற குற்றவாளியை ஆரத்தழுவி வரவேற்ற கொடுமையை என்ன சொல்வது?
என்ன தான் பேசினாலும், எப்படி வசைபாடினாலும், மொழி ரீதியாக, மாநில ரீதியாக பிளவை ஏற்படுத்த முயற்சித்தாலும் 2026 தேர்தல் திமுகவுக்கு OUT OF CONTROL - தான்" என்று தெரிவித்துள்ளார்.
Next Story