நான் என்ன தவெக நிர்வாகியா? செய்தியாளர்களை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

Hero Image
Newspoint

மதுரையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய விதம் கவனம் ஈர்த்துள்ளது. விமானம் மூலம் மதுரை வந்த அவரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்கள், "பாஜகவின் ஏ-டீம் தான் தவெக" என சீமான் கூறியதைக் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “விஜய்யிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நான் என்ன தவெகவின் மார்க்கெட்டிங் ஆபிசரா? எல்லோரும் பேசுகிறார்கள், ஆனால் கேள்வி கேட்க வேண்டியவர்கள் தவெக கட்சியினர். அவர்களிடம் கேளுங்கள். என்னையே மட்டும் தொந்தரவு செய்கிறீர்கள். சென்னையிலும் கேட்கிறீர்கள், மதுரையிலும் அதே கேள்வி. நான் சொல்ல வேண்டிய கருத்துகளை ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன்” எனக் கடுமையாகக் கூறினார்.

மேலும், “விஜய்யிடம் கேள்வி கேட்கத் தயக்கம் இருக்கிறதா? தைரியம் இருந்தால் நேரடியாக அவரிடம் கேளுங்கள். மீண்டும் மீண்டும் என்னைச் சுற்றி கேள்விகள் எழுப்புவது சரியல்ல. சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக கேள்வி கேட்பது தான் சரியான நடைமுறை” என்று வலியுறுத்தினார்.

அவரின் இந்தத் தீவிரமான பதில், பாஜக-தவெக உறவைச் சுற்றிய அரசியல் சூழ்நிலையில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.