நிர்வாண புகைப்படம் அனுப்பு... அக்ஷய் குமார் மக்களுக்கு வந்த மிரட்டல்! சைபர் குற்றங்கள் குறித்த எச்சரிக்கை!

Hero Image
Newspoint

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சைபர் குற்றங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்து பேசியபோது, “சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டில் நடந்த அனுபவத்தை பகிர விரும்புகிறேன்.

என் மகள் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். இத்தகைய விளையாட்டுகளில் அடிக்கடி தெரியாதவர்களுடன் இணைந்து விளையாட நேரிடுகிறது. அப்போது ஒருவரிடம் இருந்து ‘நீங்கள் ஆணா, பெண்ணா?’ என்ற கேள்வி வந்தது.

என் மகள் தன்னை பெண் என்று பதிலளித்தாள். உடனே மறுபடியும் ஒரு செய்தி வந்தது. அதில் ‘உங்கள் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்ப முடியுமா?’ என்று கேட்கப்பட்டது. இதனால் பயந்துபோன என் மகள் உடனே கேம் மூடிவிட்டு என் மனைவியிடம் சென்று நடந்ததைச் சொன்னாள்” என்றார்.

“இப்படித்தான் சைபர் குற்றங்கள் தொடங்குகின்றன. இவை சிறிய விஷயமாகத் தோன்றினாலும் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் ‘சைபர் வகுப்பு’ என்ற பெயரில் ஒரு பாடம் நடத்தப்பட வேண்டும் என்று நான் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதில் குழந்தைகளுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அளிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

“சைபர் குற்றம் இன்று தெருக் குற்றங்களை விட அதிக ஆபத்தானதாகி வருகிறது. அதனைத் தடுப்பது அனைவருக்கும் மிக முக்கியமான பொறுப்பு” என்று அக்ஷய் குமார் வலியுறுத்தினார்.