ஹீரோயிசம் காட்ட நினைச்ச பையன்… அப்பா வில்லன் ஆகிட்டாரே… வைரல் கிளிப்பு….!!

Hero Image
Newspoint

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஒரு சிறுவன் தனது நண்பர்களுக்கு முன்னால் பைக்கில் சாகசம் செய்து காட்டிக்கொண்டிருக்கிறான். தந்தையின் மோட்டார் சைக்கிளை அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து, பைக் மூலம் “8” வடிவத்தில் சுற்றி ஆட்டம் காட்டுகிறான். ஆனால், திடீரென சிறுவனின் தந்தை அங்கு வந்து, கடுமையாக திட்டி, அவனது “ஹீரோயிச”த்தை அடித்து தீர்க்கிறார். இந்த காட்சியை பார்த்து சுற்றி நின்றவர்கள் சிரிக்கத் தொடங்கினர்.

இந்த வீடியோ பாகிஸ்தானைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது, ஆனால் இதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை. வீடியோவை @mktyaggi என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பயனர்கள் பலர் வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஒருவர் “சிறந்த தண்டனை” என்றும், மற்றொருவர் “இந்தியாவில் இது இப்போது காணப்படுவதில்லை, பாகிஸ்தானில் மட்டுமே இப்படி நடக்கிறது” என்றும் கூறியுள்ளனர். மற்றொரு பயனர் “பையன் ஹீரோவாக நினைத்தான், ஆனால் தந்தை அவனை ஸ்டண்ட் மாஸ்டராக்கிவிட்டார்” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார்.