வெற்றி இந்தியாவிடம்… ஆனா இன்னும் கோப்பை நக்வியிடம்.! கோப்பை வேணுமா? சூர்யகுமார் வரணும்… புதிய தந்திரத்துடன் நிபந்தனை…. கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சை..!!!

Hero Image
Newspoint

ஆசியக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆனால், போட்டிக்குப் பிறகு அதிர்ச்சியூட்டும் காட்சிகள் நிகழ்ந்தன.

ஆசியக் கோப்பை வெற்றியை உறுதி செய்த இந்திய அணி, கோப்பையை ஏற்க மறுத்ததால், கோப்பை இல்லாமல் கொண்டாடும் நிலை ஏற்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை பெற வேண்டாம் என்று இந்திய வீரர்கள் முன்பே தீர்மானித்திருந்தனர்.

Newspoint

அதேசமயம், கோப்பையை எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) துணைத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தாலும், நக்வி அதை ஏற்க மறுத்தார். இதனால் இந்திய வீரர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தும், இறுதியில் கோப்பை இல்லாமல் டிரஸ்ஸிங் அறைக்குத் திரும்பினர்.

இந்தச் சம்பவம் குறித்து பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சாய்கியா கடும் அதிருப்தி தெரிவித்தார். “மொஹ்சின் நக்வியின் நடத்தை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் கோப்பை மற்றும் பதக்கங்களுடன் ஓடிவிட்டது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது.

இந்தியா கோப்பையை வென்றது உறுதி, ஆனால் நியாயமான முறையில் கோப்பை விரைவில் ஒப்படைக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்தார். இதேவேளை, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் கோரிக்கை வைத்தாலும், நக்வி அதை நிராகரித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Newspoint

செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற்ற ACC கூட்டத்தில், கோப்பை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தரப்பு வலியுறுத்தியது. ஆனால் நக்வி, கோப்பை இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தாமே ACC அலுவலகத்தில் வந்து பெற வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இதன் மூலம் இந்தியா 2025 ஆசியக் கோப்பையை வென்றிருந்தாலும், கோப்பை தற்போது நக்வியிடம் இருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இந்த பிரச்சினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வரை செல்லக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.