ஆஹா..! நடிகர் விஜய் தேவரகொண்டா- நடிகை ராஷ்மிகா ஜோடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. திருமணம் எப்போது தெரியுமா…? குவியும் வாழ்த்துக்கள்…!!
தெலுங்கு திரைப்பட நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இடையிலான நட்பு, காதலாக வளர்ந்தது தொடர்பான வதந்திகள் நீண்ட காலமாக திரை வட்டாரங்களில் பரவி வந்தது. ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்ததோடு, அவர்கள் வெளிப்படையாக உறவை ஏற்கவில்லை என்றாலும், இருவரும் பல்வேறு சமயங்களில் ஒரே இடங்களில் ஒன்றாக காணப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இந்நிகழ்வுகள் உண்மையென்பதை ஒப்புக்கொள்வது போல, கடந்த வெள்ளிக்கிழமை (அக். 3) காலை ஹைதராபாத்திலுள்ள விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில், விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பத்தினருடன், சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இதில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
மேலும், இக்கோலாகல நிச்சயதார்த்தத்தின் பிந்தைய கட்டமாக, விஜய்-ராஷ்மிகா திருமணம் 2026 பிப்ரவரியில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல ஆண்டுகளாக இந்த ஜோடி தொடர்பாக வந்துவரும் வதந்திகளுக்கு பின், தற்போது நிச்சயதார்த்தமானதாக வந்த செய்தியை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் இருவருக்கும் வாழ்த்துகள் கூறும் பதிவுகள் வைரலாகி வருகின்றன.