மோசம் போய்ட்டோம் மாறா..!! அடுத்த குற்றச்சாட்டு… “டாஸ் பார்க்காமலே பௌலிங்?” – சூர்யா மீது பாகிஸ்தானில் பரவும் டாஸ் முறைகேடு விவாதம்..!!!!

Hero Image
Newspoint

2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றியாளராக உறுதிப்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

ஃபைனல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 9-வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டாஸ் முறைகேடு நடைபெற்றதாக கூறி, அதற்கான வீடியோக்களையும் பரப்பி வருகின்றனர்.

ஃபைனல் போட்டியின் டாஸ் நிகழ்வில், இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தானுக்காக கேப்டன் சல்மான் அலி ஆகியோர் பங்கேற்றனர். ரவி சாஸ்திரியும் ஒரு பாகிஸ்தான் முன்னாள் வீரரும் டாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

இந்தச் சூழலில், டாஸ் வென்றவுடன் ‘தாங்கள் பௌலிங் தேர்ந்தெடுக்கிறோம்’ என கூறிய சூர்யகுமார் யாதவ், நாணயம் எதை நோக்கி விழுந்தது என்பதைப் பார்வையிடாமலே முடிவெடுத்ததாக பாகிஸ்தான் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதைத்தான் தற்போது ‘டாஸ் ஃபிக்சிங்’ எனக் குறிப்பிடுகிறார்கள்.

“>

 

மேலும், ‘இந்த போட்டி செல்லாதது என அறிவிக்க வேண்டும்’ என்றும், ‘கோப்பையை இந்தியாவிடம் இருந்து மீட்க வேண்டும்’ எனவும் பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் இந்திய ரசிகர்கள், சூர்யகுமார் யாதவ் தன்னம்பிக்கையுடன் நடந்ததாகவும், விதிமுறைகளை மீறாத முறையில் தான் டாஸ் நடந்ததாகவும் விளக்குகின்றனர்.

மேலும், இந்த போட்டிக்குப் பிறகு இந்திய அணி அதிகாரப்பூர்வமாக கோப்பையை ஏற்கவில்லை என்பதும், ஏசியான் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நக்வியின் கையில் இருந்து கோப்பையைப் பெறவே விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.