Breaking : தங்கம் விலை மீண்டும் உச்சத்தை தொட்டது… இன்று சவரனுக்கு ரூ.400 உயர்வு…! நகை வாங்கும் மக்களுக்கு அதிர்ச்சி..!!!
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.10,950-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.87,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் உயர்வு, நகை வாங்கும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்வுக்கான காரணமாக சர்வதேச சந்தை நிலவரங்களும், டாலர் மதிப்பு மாற்றங்களும் குறிப்பிடப்படுகின்றன. இந்நிலையில், இனி வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால், பண்டிகை காலம் நெருங்கும் நிலையில், தங்கம் வாங்கத் திட்டமிட்டிருக்கும் மக்கள் விலை நிலவரத்தை கவனித்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
Next Story