மீண்டும்... மீண்டுமா..? இன்றும் உயர்ந்த தங்கம் விலை..!!
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.880-ம், கிராமுக்கு ரூ.110-ம் அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.86,720-க்கும், ஒரு கிராம் ரூ.10,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் மாலையில் தங்கம் விலை அதிகரித்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.87,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை மாலையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹87,600-க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹10,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை மீண்டும் அதிகரித்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.