துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக மூலிகைகளில் முக்கியமானது துத்தி இலைகள் ஆகும் .இந்த துத்தி இலையை எப்படி பயன் படுத்தினால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.துத்தி இலை மலத்தை இளக்கி வெளியேற்றும்.
2. துத்தி இலைகளை இடித்துச் சாறு தயாரித்து அதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உணவு ஜீரணமாகும். .
3.சிலருக்கு பல நாட்களாக மல சிக்கல் இருக்கும் .அவர்கள் துத்திக் கீரைகளை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.
5.மேற்சொன்ன மூல பிரச்சினைகளுக்கு துத்தி இலைகளை விளக்கெண்ணையுடன் மண் பாத்திரத்தில் வதக்கி வாழை இலை அல்லது வெற்றிலையில் வைத்து டயாப்பர் (கோவனம்) போன்று கட்டிக் கொண்டால் மூலச்சூடு நீங்கும்.
6.ஆசனவாய் கடுப்பு, சூடு நீங்க துத்தி இலை பொடியை நாட்டு பசும்பால், நாட்டு சக்கரையுடன் கலந்துசாப்பிட நிவாரணம் கிடைக்கும்
8.வெள்ளை படுதலை போக்க துத்தி இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, சாப்பிட வேண்டும்.
9.இந்த வெள்ளை படுத்தலுக்கு துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
10.சிலருக்கு உடல் வலிஇருக்கும் .இந்த வலி யுள்ள நேரங்களில் துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
Next Story