சளி தொல்லையுள்ளவர்கள் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் தெரியுமா ?

Hero Image
Newspoint


பொதுவாக ஒருவருக்கு சளி தொல்லை வந்தால் அதை தொடர்ந்து பல்வேறு உடல் நல பாதிப்புகளும் வர தொடங்கும் .இந்த சளி தொல்லையை எப்படி விரட்டலாம் அதனால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
 
1.சளி தொல்லையுள்ளவர்கள் பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் போன்றவற்றை தவிர்க்கலாம் . 

2.சளி தொல்லையுள்ளவர்கள்குளிர் காலங்களிலும், மழைக் காலங்களிலும் இவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
3.சிலருக்கு சளி  அதிகரித்தால் நோயாளியின் முகம் முதலில் கரு நிறம் அடைந்து பின்னர் வெண் நிறமாக மாறும். 
4.சளி தொல்லையால் அரிப்பு உணர்வு, உடல்கழிவுகள் அல்லது மலத்தின் ஒட்டும் தன்மை மற்றும் மலம் வெண் நிறமாகும்.,  
5.சளி தொல்லையுள்ளவர்களுக்கு  ஆஸ்துமா, தொண்டைப்புண், இருமல், நீரிழி மற்றும் திரவம் தங்குதல், ஒழுகும் மூக்கு போன்ற தொல்லைகள் இருக்கும்  
6.சளி தொல்லையுள்ளவர்களுக்கு தொடர்ந்து செருமுதல் மற்றும் தொண்டையை சரி செய்யும் முயற்சி, மூச்சு திணறல், மூச்சு இழுப்பு, காய்ச்சல், நடுக்கம், குமட்டல், வாந்தி, மார்பில் எரிச்சல் அல்லது நெஞ்சு வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.
7.சளி தொல்லை சுவாசக்குழாயில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் திரவமாக இருப்பதால் அதை முற்றிலுமாக தடுப்பது சாத்தியமில்லை. 
8.ஆனால் அதிகரித்த கபத்தினை தடுப்பதற்கு புகை, கருந்தூசி, மாசுபாடு போன்றவற்றிலுருந்து பாதுகாப்புப் பெறுதல் மற்றும் ஆரோக்கியமான உணவு போன்றவை உடல் நிலையை சிறப்பாக பேணுவதற்கு உதவும்.
9.சளி தொல்லையை விரட்ட  மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவையெல்லாம்  உதவும், 
10.சளி தொல்லையுள்ளவர்கள்  சீரான உடற்பயிற்சி, நீச்சல் போன்ற உடல் பயிற்சிகளை செய்தால் நல்ல ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொண்டு நோய்களைத் தவிர்க்க முடியும்.